என்ன கொடுமை சார், கிருத்துவ மதம் வளர்க்க இருசக்கர வாகனம் திருடிய கிருத்துவ பாதிரியார் சாமுவேல்.!
என்ன கொடுமை சார், கிருத்துவ மதம் வளர்க்க இருசக்கர வாகனம் திருடிய கிருத்துவ பாதிரியார் சாமுவேல்.!

நம்ம ஊர்காரர்கள் எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வதை வழக்கமாக கொண்டவர்கள். தாங்கள் கொண்ட கொள்கையை வளர்க்க எத்தகைய நிலைக்கும் செல்வார்கள் என்பதை உறுதி படுத்தும் விதமாக கிருத்துவ மத பிரச்சாரம் செய்ய போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தினால் இருசக்கர வாகனத்தை திருடி விற்று அதன் மூலம் பெற்ற பணத்தை வைத்து கிருத்துவ மதம் வளர்த்த பாதிரியாரை லாவகமாக பிடித்தது மதுரை காவல்துறை.
மதுரை தனக்கன்குளம் அருகேயுள்ள பர்மாகாலனி பகுதியை சேர்ந்த விஜயன் (எ) சாமுவல் இவர் அதே பகுதியில் கிறிஸ்துவ புல்டர்ஸ் அசெம்ப்ளி என்ற கிருத்துவ அமைப்பை நிறுவி கிருத்துவ மத போதனைகளை செய்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் வெளியில் சுற்றித் திரிந்த பாதிரியார், வீடுகளில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளார்.
திருடிய பைக் ஒன்றை மெக்கானிக் கடையில் கொடுத்த போது பைக் விவரங்கள் குறித்து முரண்பாடாக பதில் அளித்த நிலையில் மெக்கானிக் தரப்பில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை செய்த சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் பிரியா, துணை ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர்கள் கணேசன் மற்றும் பொத்தி ராஜா தலைமையிலான காவலர் ரமேஸ் மற்றும் அன்பு என்கின்ற காவலர்கள் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பாதிரியார் சாமுவேல் அளித்த தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 11 பைக்குகளை சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் பாதிரியாரான படிப்பை முடித்த சாமுவேல் அழகன்குளத்தில் ஊழியம் செய்து வந்தார் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி திடீரென நிறுத்தப்பட்டது.
டூவீலர்களில் திருடி தலா ரூபாய் 10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்து வந்துள்ளார் சில நாள்களுக்கு முன் டூவீலர் ஒன்றை பைபாஸ் ரோடு மெக்கானிக்கிடம் சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார்.
சாமுவலின் அலைபேசி எண் ஆதார் அட்டை நகலை மெக்கானிக் வாங்கிக்கொண்டார் டூவீலரில் இருந்த ஆவணங்களை மெக்கானிக் சரிபார்த்த போது அது வேறு ஒரு வருகிறது என்று தெரிய வந்தது
அதில் இருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார் மெக்கானிக்.
உடனே டூவீலர் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சாமுவேல் கைது செய்யப்பட்டார் என்றனர்.
கொரோனா ஊரடங்கால் கிருத்துவ மத பிரச்சாரம் செய்ய நிதி இல்லாத கொடுமையால் பாதிரியார் சாமுவேல் இரு சக்கர வாகனத்தை திருடும் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதம் வளர்க்க நிதி ஆதாரத்தை உருவாக்க திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை பகுதி கிருத்துவர்களை வருத்தமடைய செய்துள்ளது.