புதுச்சேரி: துணை நடிகைகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவர்கள் கைது!
புதுச்சேரி: துணை நடிகைகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவர்கள் கைது!

புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சந்துருஜி இவர் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து மோசடி செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ள இவர் புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பேருராட்சிக்கு உட்பட்ட மீனவ கிரமமான தந்திராயன் குப்பத்தில் விடுதி ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார்.
மேலும் கொரோனா பாதிப்பால் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படததால் விடுதியில் எவ்வித வருமானம் இல்லாத காரணத்தால், துணை நடிகைகளை வைத்து விபச்சாரத்தில் சந்துருஜீ ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தந்திராயன் குப்பம் பகுதியில் விடுதிகளில் விபச்சாரம் நடைப்பெறுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் தந்திரியான் குப்பம் பகுதியில் உள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர் அப்போது சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 2 துணை நடிகைகளை விடுதியில் வைத்து விபசார்த்தில் ஈடுப்படுத்த முயன்றது கண்டுப்பிடிக்கப்பட்டது, மேலும் விடுதி உரிமையாளர் சந்துரு ஜி, அவரது நண்பர் விஜயகுமார், விடுதி காப்பாளரான டெல்லியை சேர்ந்த அஜய் ஜோசப் ஆகிய 3 பேரை விபச்சார சட்டத்தின்கீழ் கோட்டகுப்பம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பியூட்டிஷியன் மட்டும் மசாஜ் தொழில் கற்றுத் தருவதாக சென்னையிலிருந்து நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தும் நோக்கில் அவர்கள் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 2 துணை நடிகைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிக்கு கோட்டகுப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் சீல் வைத்தார்.