கோவிலில் நுழைந்ததற்காக தலித் இளைஞர் கொல்லப்பட்டாரா? மீண்டும் பொய்களை பரப்பும் தீய சக்திகள்.!
கோவிலில் நுழைந்ததற்காக தலித் இளைஞர் கொல்லப்பட்டாரா? மீண்டும் பொய்களை பரப்பும் தீய சக்திகள்.!

உத்திர பிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்ததற்காக உயர் சாதியினர் அவரை சுட்டுக் கொன்று விட்டதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிகழ்வைப் பயன்படுத்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்க எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்று அலையும் இடதுசாரி ஆதரவு கூட்டம் #WhiteLivesMatterஐ ஒட்டி #DalitLivesMatter என்று சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
பிரபல திரைப்பட இயக்குநர் நீரஜ் கைவானும் இந்த பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்.
காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஃபஹத் ஷா தலித் இளைஞர் கொல்லப்பட்டதை எதிர்த்து ஏன் எந்த பிரச்சாரமோ, சமூக ஊடக செயல்பாடோ, ஊடக எதிர்ப்போ இல்லை என்று கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார். இவர் புல்வாமா தீவிரவாத தாக்குதலின் போது காஷ்மீர் மாணவிகள் உத்திரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள விடுதியில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும், வெளியில் வன்முறை கும்பல் இருப்பதால் அவர்களை மீட்க உதவி தேவைப்படுகிறது என்றும் வதந்தியைப் பரப்பியது குறிப்பிடத்தக்கது. அப்போதே உத்திரகண்ட் மாநில காவல்துறையினர் அது உண்மையல்ல வதந்தி என்று அறிக்கை வெளியிட்டனர்.
தலித் இளைஞர் கொல்லப்பட்ட நிகழ்வில் கோவிலுக்குள் நுழைந்ததால் அவரது மகனுக்கும் சில உயர்சாதி இளைஞர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கொல்லப்பட்ட இளைஞரின் தந்தை கூறியதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், அது உண்மையல்ல என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்நிகழ்வு நடந்த அம்ரோஹா பகுதி காவல்துறையினர் இது சாதிப் பிரச்சினை இல்லை என்றும் ₹ 5000 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட தகராறு என்றும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை தகவல்களின்படி மாந்தோப்பு மற்றும் தேனீ வளர்ப்பு ஆகியவற்றில் கொல்லப்பட்ட இளைஞர் கொலையாளிகளுடன் பங்குதாரராக செயல்பட்டுள்ளார். இதில் பணப்பிரச்சனை வந்ததால் இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் ஒரு தரப்பு இளைஞர்கள் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர். சில நாட்கள் கழித்து பழி வாங்குவதற்காக மறுபடியும் வந்து தலித் இளைஞரை கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலை ₹ 5,000 பண விஷயத்தால் நடந்ததே அன்றி சாதிப் பிரச்சினையால் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நன்றி : Opindia