Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயை தொட்டு நடிக்காதீங்கனு சொன்னாங்க, அஜித் பார்க்க டெரர் என இருவருடன் நடித்தது குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல நடிகர்.!

விஜயை தொட்டு நடிக்காதீங்கனு சொன்னாங்க, அஜித் பார்க்க டெரர் என இருவருடன் நடித்தது குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல நடிகர்.!

விஜயை தொட்டு நடிக்காதீங்கனு சொன்னாங்க, அஜித் பார்க்க டெரர் என இருவருடன் நடித்தது குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல நடிகர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 8:58 AM GMT

விஜயை தொட்டு நடிக்காதீங்க ன்னு சொன்னாங் அஜித் பார்க்க டெரர் என இருவருடன் நடித்தது குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன்.

Thala Thalapathy : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் பின்னணி பாடகராகவும் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பவர் பாடகர் யுகேந்திரன்.

மலேசியா வாசுதேவனின் மகனான இவர் படங்களிலும் நடித்து வருகிறார். அஜித் விஜய் என இருவருடனும் இணைந்து நடித்துள்ளார்.

இதனால் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர்கள் இருவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

விஜயுடன் நடிக்கும் போது அவரை தொட்டு நடிக்காதீங்க ன்னு சொன்னாங்க. ஆனால் உண்மையில் அவர் அப்படி இல்லை. அவரைத் தொடாதீங்க அவருடன் பேசாதிங்க அவர் இப்படி, அவர் அப்படி என்பதெல்லாம் அவரைச் சுற்றி இருப்பவர்கள் தமக்குத்தாமே போட்டுக்கொள்ளும் ரூல்ஸ் தான்.

ஆக்ஷன் காட்சிகளிலும் நடனத்திலும் விஜய் அடித்துக்கொள்ள ஆளே இல்லை. சண்டைக்காட்சியில் ஒருவர் மீது கூட ஒரு அடி படாது அந்த அளவிற்கு பார்த்து பார்த்து நடிப்பார் என கூறியுள்ளார்.

அதேபோல் அஜித்துடன் நடித்தது குறித்து கேட்டதற்கு அஜித், விஜய்க்கு அப்படியே எதிரானவர். யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார். நான் எழுதி நின்றால் கூட ஏன் எனக்கு நிற்கிறீர்கள் மரியாதை மனதில் இருந்தால் போதும் என்று கூறுபவர்.

நான் பார்த்ததிலே மிகவும் சிறந்த மனிதர் அஜித். பார்ப்பதற்கு கொஞ்சம் டெரராக தான் இருப்பார், ஆனால் நிஜத்தில் மிகவும் தன்மையானவர். அனைவருக்கும் மரியாதை அளிப்பவர் என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News