புதுச்சேரி : முழுவதுமாக மூடப்பட்ட சட்டப்பேரவை.!
புதுச்சேரி : முழுவதுமாக மூடப்பட்ட சட்டப்பேரவை.!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதனிடையே புதுச்சேரியில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 648 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்க கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் அலுவலகம் முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது இதேபோல் சபைக் காவலர்களை தவிர்த்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.