அயோத்தி ராமர் கோவிலுக்கான 'அடிக்கல் நாட்டுதல்' பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் கரங்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும் : சாதுக்கள் பிடிவாதம்!!
அயோத்தி ராமர் கோவிலுக்கான 'அடிக்கல் நாட்டுதல்' பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் கரங்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும் : சாதுக்கள் பிடிவாதம்!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைகள் நேற்று முன்தினம் புதன்கிழமை குபேதிலா ஆலயத்தில் ஆரத்தி உட்பட ருத்ரா அபிஷேகங்கள் முடிக்கப்பட்டு வரைபடத்தின் படி கட்டுமானத்துக்கான அடையாள குறிகள் இடப்பட்டன என்றாலும் முன்னர் வந்த செய்திகள் படி அடிக்கல் எதுவும் நாட்டப்படவில்லை.
இந்நிலையில், பரிஷத் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி, டேய்னிக் ஜாகரன் பத்திரிக்கைக்கு நேற்று அளித்த பேட்டியில், "நேற்று முன்தினம் ருத்ர அபிஷேகம் முடித்து பூமி பூஜை மட்டுமே செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டி கட்டுமானப்பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் 2 ந்தேதி செய்வதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிகழ்வில் பங்கேற்று அவர்கள் இருவரின் கரங்களால் அடிக்கல் எடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதே இங்குள்ள அனைத்து சாதுக்களின் ஒட்டு மொத்த விருப்பமாக உள்ளது.
அகில பாரதீய அகார பரிஷத் அமைப்பும் இதே கோரிக்கையை வலியுறுத்திக் கோரியுள்ளது. இருவரும் வந்து நடத்தித் தர மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதே சமயம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி முன்னர் பிரம்மாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுள்ள கொரோனா நோய் தொடர்பான சூழ்நிலைகளால் எளிமையாக அதே சமயம் முறைப்படி செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஆன்மீக ஸ்தலங்கள் சென்ற திங்கள் கிழமை திறக்கப்பட்ட நிலையில், தற்காலிக ராமர் கோவிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை தினமும் திறக்கப்படுவதாகவும் கூறினர்.
https://swarajyamag.com/insta/pm-modi-up-cm-yogi-should-lay-foundation-stone-for-ram-mandir-construction-ayodhya-saints-express-their-wish