ஐஎஸ்ஐ கடத்தியதாக அஞ்சப்பட்ட நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிப்பு.!
ஐஎஸ்ஐ கடத்தியதாக அஞ்சப்பட்ட நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிப்பு.!

பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் இருவரைக் காணவில்லை என்று செய்தி வெளியான நிலையில் அவரகள் பாகிஸ்தான் உளவுப் பிரிவு ISI ஆல் கடத்தப்பட்டுள்ளதாக டைம்ஸ்நவ் ஊடகம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர் கௌரவ் அலுவாலியா மற்றும் பிற தூதரக பணியாளர்களை ஐஎஸ்ஐ ஆட்கள் இருசக்கர வாகனத்தில் துரத்தி அச்சுறுத்த முயற்சித்தனர். இதையடுத்து வியன்னா 1992 ஒப்பந்தத்தை மீறி தூதரகப் பணியாளர்களை துன்புறுத்தும் விதமாக பாகிஸ்தான் நடந்து கொள்வதாக இந்திய அரசுத் தரப்பில் புகார் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் தற்குறி பாகிஸ்தான் எதற்கும் அஞ்சாமல் யாருக்கும் கட்டுப்படாமல் பணி நிமித்தமாக கடந்த திங்களன்று காலை 8.30 மணிக்கு வெளியே சென்று இரு மத்திய தொழிற்படை அதிகாரிகள் இரண்டு பேர் அவர்களது காருடன் மாயமானதாக தகவல் வெளியானது. அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்துக்கு சென்று சேரவில்லை என்பதாலும் எங்கு சென்றார்கள் என்று என்று கண்டுபிடிக்க இயலவில்லை என்பதாலும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அவர்களைக் கடத்தி இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
இந்நிலையில் 'காரில் இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக' கூறி 12 மணி நேரம் விசாரணை செய்த பாகிஸ்தான் அமைப்புகள் அவர்கள் ₹ 10,000 மதிப்பில் பாகிஸ்தான் ரூபாயின் கள்ள நோட்டுகள் வைத்திருந்ததாக பழி போட்டுள்ளது. இதை இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதால் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறிய நிலையில் அவர்களின் செய்தியில் பல குளறுபடிகள் இருப்பதாகத் தெரிகிறது.
12 மணி நேர விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கு இரவே இந்திய தூதரகத்தில் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களது உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது கள்ள போட்டு வைத்திருந்ததாகக் கூறி இரு அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ளப்படாத அரசியல் பிரதிநிதிகள் (Persona non grata) என்று அறிவிக்கப்பட்டு பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு இரு பாகிஸ்தான் ஹை கமிஷன் பணியாளர்கள் ரயில்வே மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான ஆவணங்களை வைத்திருந்ததாகவும் உளவு பார்த்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து தூதரக அதிகாரிகளை பணி செய்ய விடாமல் வீட்டின் முன் நின்று நோட்டமிடுவது, வெளியே செல்லும் போது அச்சுறுத்தம் வகையில் துரத்தி வருவது என்று சின்ன புத்தி கொண்ட பாகிஸ்தான் பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.