தேநீர் விற்பனை செய்பவரின் மகள் இந்திய விமானப்படை விமானியாக நியமனம்.!
தேநீர் விற்பனை செய்பவரின் மகள் இந்திய விமானப்படை விமானியாக நியமனம்.!

நம்முடைய கனவுவை நினைவாக்குவதை மனதில் உறுதி கொண்டு எந்தத் தடையையும் பெரிதாக நினைக்காமல் செய்யப்பட்டால் வெல்லலாம் என்பதை இந்திய விமானப்படை விமானியாக நியமனம் ஆகிய தேநீர் விற்பனை செய்பவரின் மகள் நிரூபித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுச்சில் என்கிற பகுதிகளில் 25 வருடமாக தேநீர் விற்பனை விற்று வரும் சுரேஷ் கங்காவின் 24 வயது மகள் அஞ்சல் கங்வால் இந்தியாவின் இந்திய விமானப்படை அதிகாரியாக நியமனம் ஆகியுள்ளார்.
2013ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி செய்த வீரர்களின் தைரியத்தை பார்த்து தாமும் இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என என்னுடைய மகள் விரும்பினால். அந்த கனவினை நினைவாக்குவது எளிதான விஷயம் அல்ல. ஆனால், என்னுடைய மகள் அஞ்சல் மனதில் உறுதி கொண்டு முயற்சி செய்து இந்திய விமானப்படையில் சேர்ந்துள்ளார் என சுரேஷ் பெருமையாக தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்; அஞ்சல் கங்வாலுக்கு ட்விட்டரில் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.