இந்திய வீரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு வந்தபோது அதிகாரிகள் கண்ட காட்சி : உறைய வைக்கும் தகவல்கள்.!
இந்திய வீரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு வந்தபோது அதிகாரிகள் கண்ட காட்சி : உறைய வைக்கும் தகவல்கள்.!

சீன இராணுவம் இந்திய இராணுவ வீரர்கள் மீது மிக கொடுமையான வன்முறையை கையாண்டனர். மோதலின் போது அவர்கள் நிராயுதபாணிகளான இந்திய வீரர்களின் முகத்தை கோரமாக சிதைத்ததுடன், அவர்களின் கழுத்துப் பகுதியை மூர்கத்தனமாக வெட்டியுள்ளனர் என்றும் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது இது தெரியவந்ததாகவும், சீன வீரர்களின் இந்த வன்முறை செய்கைகள் போர் நெறிமுறைகளை மீறியவை என்றும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலின்போது -இந்திய துருப்புக்களைத் தாக்க சீனர்கள் ஆணி பதித்த இரும்புத் தண்டுகளைப் பயன்படுத்தினர், அவற்றின் படங்கள் ஆய்வாளர்களால் பகிரப்பட்டுள்ளன.
இந்த ஆணிகள் பதித்த இரும்புத் தடிகள் மூலம்தான் இந்திய வீரர்களின் முகங்களை சிதைத்தும், அவர்களின் கழுத்துப் பகுதியை குறி வைத்து தாக்கி கொடுமையான முறையில் வெட்டியதாக தெரிய வந்துள்ளது.
"சுமார் 17 வீரர்களின் உடலில் மேற்கண்ட தீவிர வன்முறை அடையாளங்கள் இருந்தன என்றும் வீரர்கள் படுகாயம் அடைந்த உருக்குலைந்த உடல்களை யாரும் படம் எடுக்கவேண்டாம் என மருத்துவமனை மற்றும் ராணுவ தளத்தில் இருந்த அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 20 வீரர்களில் மற்ற 3 பேர்தான் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் மற்ற 17 வீரர்களின் உடலில் முள் கம்பியால் குத்தப்பட்ட ஏராளமான பஞ்சர்கள் இருந்ததாகவும், அவர்களில் 3 பேரின் உடல் முக அடையாளம் தெரியாதவாறு சிதைக்கப்பட்டு இருந்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை சீனா இவ்வாறு கடுமையாக சிதைத்திருப்பது இந்திய தரப்பில் கடுமையான கோபத்திற்கு வழிவகுத்தது. இந்த கொடூர தாக்குதலின்போது இந்திய வீரர்களின் எண்ணிக்கையை விட சீன துருப்புக்களின் எண்ணிக்கை 5 மடங்கு இருந்ததாகவும், அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இந்திய படைகள் களத்தில் தீவிரமாக இறங்கியதில் அடுத்து சீனர்கள் தரப்பில் 40 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
warajyamag.com/insta/china-inflicted-extreme-injuries-on-indian-soldiers-bodies-disfigured-faces-beyond-recognition