Kathir News
Begin typing your search above and press return to search.

அசாம்: நாற்காலியினால் ஏற்பட்ட சண்டை படுகொலையில் முடிந்த விபரீதம்! ஹுசைன் அலி உள்பட ஐந்து பேர் கைது!

அசாம்: நாற்காலியினால் ஏற்பட்ட சண்டை படுகொலையில் முடிந்த விபரீதம்! ஹுசைன் அலி உள்பட ஐந்து பேர் கைது!

அசாம்: நாற்காலியினால் ஏற்பட்ட சண்டை படுகொலையில் முடிந்த விபரீதம்! ஹுசைன் அலி உள்பட ஐந்து பேர் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 7:39 AM GMT

அசாம் மாநிலத்தின் குவஹாத்தியின் நூன்மதி பகுதியில் ஒரு நாற்காலியினால் ஏற்பட்ட சிறு விவாதம், பட்டப்பகலில் ஒரு கொடூர கொலையில் முடிந்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

சம்பவம்

உதவி போலீஸ் கமிஷனர் தேபராஜ் உபாத்யாய் கூறுகையில், ரிதுபர்ணா பெகு என்ற பழங்குடி (tribal) இனத்தை சேர்ந்த இளைஞர், அர்மான் அலி என்பவருக்கு சொந்தமான 'அர்மான் ஹோம் ஃபர்னிஷிங்' என்ற வீட்டு உபயோக ஜாமான்கள் கடைக்கு சென்றார். அங்கே வேலை பார்த்த ஹுசைன் அலிக்கும் பெகுவுக்கும் ஒரு நாற்காலியை இட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. பெகு, ஹுசைன் அலியை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹுசைன் அலி, தன் குடும்பத்தை வர வைத்து பெகுவை அடித்தான். பிறகு பின்னாலிருந்து கத்தியால் குத்திப் பெகுவைக் கொலை செய்தான்.உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாலும் அதற்கு முன் பெகு இறந்து விட்டார். இது தொடர்பாக துலால் அலி, இப்ராஹிம் அலி, மனோவாரா கத்துன், உசேன் அலி மற்றும் அர்மான் அலி என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறுகிறார். கைது

இந்தப் படுகொலை கடையின் முன்னால் இருந்த CCTVயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் (ஐபிசி) பிரிவுகள் 147 (கலகம்), 148 (கலகம், ஒரு பயங்கர ஆயுதம்), 149 மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



Image Credits: NorthEastNow

இதன் வீடியோ கிளிப்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. பெகுவின் இளம் மனைவி, 3 மாதக் குழந்தையுடன் கதறும் காட்சிகள் பரிதாபமாக உள்ளன.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News