முகக்கவசம், சமூக இடைவெளி, பொது சுகாதாரத்தை கடைபிடியுங்கள் கொரோனாவை விரட்டுவேம் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல்.!
முகக்கவசம், சமூக இடைவெளி, பொது சுகாதாரத்தை கடைபிடியுங்கள் கொரோனாவை விரட்டுவேம் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல்.!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவ்வப்போது பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தெரிவித்து வருகிறார் அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதுச்சேரி மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் முன்வைக்கிறேன். இதில் முக்கியமாக 3 விஷயங்களை கடைபிடியுங்கள். முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடியுங்கள், அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை முழுமையாக பேணுங்கள். முக கவசம் உங்களையும், மற்றவர்களையும் காக்கும்.
காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என பொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம் கடைபிடியுங்கள். வேகமாக இடித்துப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டாம். பொறுமையுடன் இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள். மார்க்கெட்டுகளில் இது முக்கியம். முக்கியமாக பொது சுகாதாரத்தையும், தனிநபர் சுகாதாரத்தையும் அனைத்து இடத்திலும் பேணி பாதுகாக்க வேண்டும்.
நாம் தற்போது கடினமான சூழலில் இருக்கிறோம். தடுப்பு நடவடிக்கை அவசியம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் அனைவருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. நமக்கு பாதுகாப்பு மிக அவசியம். தொடர்ந்து தனிநபர் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் கூட்டு பொறுப்புடன் செயல்படுங்கள். ஏனெனில் நாட்டின் சில பகுதிகளில் உள்ள தகவல்கள் பயமுறுத்துகின்றன. அதனால் தடுப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளையும் பின்பற்ற வேண்டும். கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் இருந்தால் தான் மக்களை காப்பாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.