Kathir News
Begin typing your search above and press return to search.

விஷாலின் சக்ரா படம் டிரைலர் ரிலீஸ் விஷுவல்ஸ் எல்லாம் தெறிக்குதா?

விஷாலின் சக்ரா படம் டிரைலர் ரிலீஸ் விஷுவல்ஸ் எல்லாம் தெறிக்குதா?

விஷாலின் சக்ரா படம் டிரைலர் ரிலீஸ் விஷுவல்ஸ்  எல்லாம் தெறிக்குதா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 8:12 AM GMT

நடிகர் விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்திக், ஆர்யா தமிழ் டிரைலரை வெளியிட்டனர். தெலுங்கு டிரைலரை நடிகர் ராணாவும், மலையாளம் ட்ரைலரை மோகன்லாலும் வெளியிட்டனர். #chakra ஹாஸ்டேகில் நடிகர் விஷாலின் சக்ரா படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன.

சக்ரா

இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோ பாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சக்ரா படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் 35 நொடி க்ளிப்ஸ் காட்சிகள் வைரலான நிலையில், தற்போது அதிரடியான டிரைலர் வெளியாகி இருக்கிறது.

ட்ரைலர் எப்படி இருக்கு?

சக்கர படத்தின் ட்ரைலர் ஆரம்பத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் நாள். சென்னையில் 18 இடங்களில் ஹேக்கர்கள் கொள்ளை அடிக்கின்றனர். அதில், பரம் வீர் சக்ரா விருதும் ஒன்று. ராணுவ வீரரான விஷால் எப்படி கொள்ளையர்களை டெக்னிக்கல் முறையில் பிடிக்கிறார் என்பதே ட்ரைலரில் கூறியிருக்கின்றனர். இது இரும்புத்திரை கதையை மையப்படுத்தி இருக்கிறது. அந்தப் படத்தைப் போலவே இப்படத்திலும் ஹேக்கர்கள் கொள்ளை அடிப்பது போல காட்சிகள் வந்துள்ளன.

சக்ரா படத்தின் வில்லன் குறித்து சஸ்பென்ஸ் ட்ரெய்லரில் நீடித்துக் கொண்டிருக்கிறது. ட்ரெய்லர் முழுவதும் வில்லத்தனமான காட்சிகள் டிஜிட்டல் ஹாக்கிங் ஆபத்தானது என்பது போல பேசும் வசனம். மோடியின் டிஜிட்டல் இந்தியா பாதுகாப்பது என்ற பேச்சு சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் ஒரு புள்ளியை வைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News