இந்து மதம் குறித்து அறிந்திராத அரிய தகவல்கள்.!
இந்து மதம் குறித்து அறிந்திராத அரிய தகவல்கள்.!

இந்து மதம் உலகின் மூன்றாவது பெரிய மதமாகும், இதில் 95% இந்துக்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். ஒரு சராசரி இந்துவை ஶ்ரீ ராமரோ, அல்லது கிருஷ்ண பரமாத்மாவோ எத்தனை வருடத்திற்கு முன்பு வாழ்ந்தார் என்று கேட்டால் ஐம்பதாயிரம் வருடத்திற்கு முன்பாக என்றோ அல்லது ஏதாவது ஒரு எண்ணிக்கையை கூறி அத்தனை வருடத்திற்கு முன்போ என்று கூறுவார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு வருடங்களின் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல இந்துமதத்தை பொறுத்த வரை காலம் என்பது காலச்சக்கரமாக சுழல்கிறது, மேற்கத்திய நம்பிக்கைகளின் படி காலம் நேர்கோட்டில் செல்வது. ஒரு சூழல் என்பது நான்கு யுகங்களை கொண்டது சத்யா த்ரேதா ட்வபர மற்றும் கலி என்பதாகும். ஒவொரு யுகமும் அதர்மத்தால் நிறையும் போது அது அழிக்கப்பட்டு மீண்டும் புது யுகம் பிறக்கிறது.
இந்து மதத்தின் மிக பழமையான நூல் ரிக் வேதமாகும். இது 3800 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. இந்த வேதங்கள் எதுவும் எழுத்துக்களாக எழுதப்பட்டது அல்ல இவை சப்தங்கள். ஸ்வரங்கள் மூலம் பாடப்பட்டு பல தலைமுறைகள் தாண்டி இன்று வாசிப்புக்குரியதாக இருந்து வருகிறது, எந்த எழுத்து பிரதியும் இல்லாமல் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாய்வழியாக கடத்தப்பட்டு வரும் இந்த வேதங்களில் இன்று வரை எந்த குறைபாடோ தவறோ ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமான ஒன்று.
இந்து மதம் நான்கு படிநிலைகளை மனிதனுக்கு வகுத்திருக்கிறது. அதாவது நியாயமான புலன் இன்பங்கள், செல்வம் சேர்ப்பது, தத்வர்த்தங்களை படிப்பது மோட்சம் அடைவது என்கிற படிநிலைகள் ஒவொவொரு மனிதனுக்கும் பொருந்தும். 108 என்பது இந்துக்களின் மிக முக்கியமான என்னாகும் இந்த என் ஜோதிட அறிவியலில் பயன்படுகிறது, ஆழ்மன அறிவியலிலும் பயன்படுகிறது, இந்த எண்ணின் கூட்டு தொகையான 9 ஆம் என்னும் மிக முக்கியமான எண்ணாக கருதப்படுகிறது . இந்து மதம் நேபால், மொரிசியஸ், பாலி போன்ற நாடுகளை அதிக மக்களால் பின்பற்ற படுகிறது இந்து மதத்திற்கென்று நிறுவனர் யாரும் இல்லை. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல உண்மை யாருடைய சொத்தும் அல்ல. என்றென்றைக்கும் இருந்து வரும் தர்மமே இந்து மாதமாக இந்திய மக்களிடையே வழங்கி வருகிறது