கொரோனாவில் இருந்து குணமடைந்தார் டெல்லி சுகாதார துறை அமைச்சர்.!
கொரோனாவில் இருந்து குணமடைந்தார் டெல்லி சுகாதார துறை அமைச்சர்.!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின். அவர் காய்ச்சலும் மற்றும் சுவாசக் கோளாறல் பாதிக்கப்பட்டார். இதனால், அவரை கடந்த 16ஆம் தேதி டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதை அடுத்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அப்போது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு அதிகமானது. பின்னர் அவருக்கு செயற்கையாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது.
அதன் பிறகு அவரை சாகேத் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை கொடுப்பது பற்றி கடந்த 19ஆம் தேதி முடிவெடுக்கப்பட்டது
இதனை தொடர்ந்து சிகிக்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆகவே அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளார். அத்துடன் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.