கொரோனா வைரஸை அழிக்க பிவி சிந்து ஆலோசனை.!
கொரோனா வைரஸை அழிக்க பிவி சிந்து ஆலோசனை.!

மனிதர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருந்தால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என பி.வி சிந்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 13 ஆயிரத்து அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனைப் பற்றி பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கூறியது: நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருக்க விளையாட்டு மற்றும் உடற்தகுதி பயிற்சிகளை செய்ய வேண்டும். கொரோனா வைரஸை அழிப்பதற்கு இன்னும் தடுப்பூசி, மருந்துகள் போன்றவற்றை கண்டுபிடிக்கவில்லை. இதனால், கொரோனாவை வெல்ல விளையாட்டு மற்றும் உடற்தகுதி பயிற்சி செய்வது உதவி செய்யும்.
இந்த சமயத்தில் இதய நோய்கள், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றிலிருந்து முதியவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு வாரம் 300 நிமிடங்கள் எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என உலக சுகாதார தெரிவித்துள்ளது.
மேலும், அனைவரும் முடிந்த அளவில் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளாக இருப்பவர்கள் குறைந்த அளவில் ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு பி.வி சிந்து கூறியுள்ளார்.