எஸ்.ஐ. வில்சன் வழக்கில் சிறப்பாக செய்யப்பட்ட டி.ஐ.ஜி., இரண்டு எஸ்.பி. உள்பட ஐந்து அதிகாரிகளுக்கு முதலைமைச்சர் விருதுக்கு தேர்வு.!
எஸ்.ஐ. வில்சன் வழக்கில் சிறப்பாக செய்யப்பட்ட டி.ஐ.ஜி., இரண்டு எஸ்.பி. உள்பட ஐந்து அதிகாரிகளுக்கு முதலைமைச்சர் விருதுக்கு தேர்வு.!

தமிழ்நாடு காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு டிஐஜி, இரண்டு எஸ்.பி உள்பட ஐந்து அதிகாரிகள் முதலமைச்சர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ அதிகாரி வில்சனை சென்ற ஜனவரி 8 ஆம் தேதி இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். இந்த கொலையை செய்த அப்துல் ஷமீம் மற்றும் தவ்பீக் இருவரையும் காவல்துறையினர் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு சென்று கைது செய்தனர்.
இந்த இவருக்கு உதவி செய்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தமிழக தலைவர் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் மற்றும் அப்துல் சமது ஆகிய மூன்று பேரையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி இந்த பயங்கரவாதிகளை உடனே கைது செய்வதற்கு உதவிய காவல் அதிகாரிகளின் இந்த வீர செயல்களுக்காக முதலமைச்சர் விருது வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு தேர்வாகிய தமிழ்நாட்டு காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு டிஐஜி டாக்டர் கண்ணன், க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெ.மகேஷ், மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், அதே பிரிவின்கோயம்புத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பண்டரிநாதன், சென்னை காவல் ஆய்வாளா் எம்.தாமோதரன் போன்றோர் தேர்வாகி உள்ளதாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவில் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த அதிகாரிகளுக்கு விருது உள்பட ரூபாய்.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்படவுள்ளது.