Kathir News
Begin typing your search above and press return to search.

சே குவேரா: 'புரட்சியாளன்' எனும் வெள்ளை சாயம் பூசப்பட்ட கொலைகாரன்! மறுமுகம் என்ன?

சே குவேரா: 'புரட்சியாளன்' எனும் வெள்ளை சாயம் பூசப்பட்ட கொலைகாரன்! மறுமுகம் என்ன?

சே குவேரா: புரட்சியாளன் எனும் வெள்ளை சாயம் பூசப்பட்ட கொலைகாரன்! மறுமுகம் என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jun 2020 7:10 AM GMT

சே குவேரா என்ற பெயர் புரட்சியாளன் என்ற பெயருடன் உலகெங்கிலும் அடையாளப்படுத்தப்படுகிறது. டி-ஷர்ட்கள் மூலம் உலகின் பல மூலைகளிலும் பிரபலமான போராளி அவராகத் தான் இருக்கும். அதை அணியும் பாதி இளைஞர்களுக்காவது அவர் வாழ்க்கையின் முழு வரலாறும், நடவடிக்கைகளின் பின்னணியும் தெரியுமா என்பது சந்தேகம் தான். புரட்சி, போராளி என்ற வார்த்தைகள் அதற்கடியில் வாழ்ந்த, அதனால் பாதிக்கப்பட்ட மக்களைத் தவிர அனைவருக்கும் இனிப்பாகத் தான் இருக்கும். குறிப்பாக கம்யூனிஸ்ட் புரட்சிகள். கம்யூனிஸ்ட் ஆட்சிகளும், அதன் தலைவர்களும் சர்வாதிகார ஆட்சியை இரும்புத் திரைகளுக்கு பின்னால் இப்போது வரை நடத்தினாலும், ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டு அதற்கு ஏங்குவோரும் இருக்கத் தான் செய்கிறார்கள் எனும் போது 50 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த ஒருவரின் கொடூரங்களுக்கு 'புரட்சியாளன்' என்ற வெள்ளை சாயம் பூசுவது கடினமான விஷயம் இல்லை. ஆனால் அதைத் தோலுருத்துக் காட்டுவது நம் கடமை.

1. சேவுக்கு கொலைகள் செய்வது மிகவும் பிடிக்கும்

அவருடைய டைரிகளில் எதிரியை கொலை செய்த பிறகு வரும் இரத்தவாடை பிடிக்கும் என்று எழுதும் அளவுக்கு சேவுக்கு கொலைகள் பிடிக்கும். புரட்சி என்றாலே பல கொலைகள் செய்வதும் அடக்கம். கியூபா புரட்சி வெற்றியடைந்த பிறகு, எதிர்த் தரப்புக்கு உதவி செய்ததாக கூறி பல ஆயிரக்கணக்கான மக்களை, விவசாயிகளை, எந்த வித உரிய நீதி நடைமுறைகளுமின்றி கங்காரு நீதிமன்றம் போல சுட்டுக் தள்ள உத்தரவிட்டார். அவரது நெருங்கிய புரட்சியாளர்கள் இப்படி செய்ய வேண்டாம் என்று கூறிய போது சேவின் பிரபலமான வார்த்தைகள் இவை.

"This is a revolution! And a revolutionary must become a cold killing machine motivated by pure hate."

இதை அவர் கூறியிருப்பது சந்தேகம் என்று நீங்கள் நினைத்தால், 1964-ல் இந்தக் கொலைகளை பற்றி கேள்வி வந்த போது, ஐ.நா சபையில் உலக நாடுகளின் முன்னிலையில் அவர் கூறிய பதில் இது,

"Yes, we have executed people; we are executing people and shall continue to execute people as long as it is necessary."

புரட்சிக்கு 'எதிரானவர்களை' கொன்று தீர்த்த பின், அவரது அடுத்த குறி ஓரினச்சேர்க்கையாளர்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள். கம்யூனிஸ்ட் நாடுகளில் 'corrective work camp' பொதுவானவை. சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் அவை இன்றும் உள்ளன. மிக மிக மோசமான நிலைமையில் அங்கிருப்பவர்கள் கொடுமைப்படுத்தப்படுவார்கள். சாண்டா கார்லா, லா கபானா ஆகிய இரண்டு இடங்களில் இத்தகைய சிறைகளை சே ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே சுட்டுக் தள்ளப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்களை சே தன் சொந்தக் கைகளால் கொன்றார்.

1962-ல் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் அணு ஆயுதப் போர் தடுக்கப்பட்ட போது, சே மிகவும் கோபமடைந்தார்.

"We must walk the path of liberation even if it costs millions of atomic victims," என்று அவர் கூறினார். நியூயார்க் நகரம் மட்டுமாவது அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்பினார்.

2. சே குவேரா அவ்வளவு பெரிய கொரில்லாப் போர்த் தலைவர் இல்லை

கியூபா புரட்சியின் வெற்றியில் அவருக்கு பங்களிப்பு அதிகம் உண்டு. ஆனால் அதைத் தவிர்த்து அவர் ஈடுபட்ட அனைத்துப் புரட்சிகளும் படு தோல்வியில் முடிந்தது. உதாரணமாக பனாமா, ஹைட்டி, டொமினிகன் குடியரசு மற்றும் நிகரகுவா. முக்கியமானவை 1965 இல் காங்கோவும், 1967 இல் பொலிவியாவும்.இதில் பொலிவியாவில் ஏற்பட்ட படுதோல்வி அவர் மரணத்திற்கும் காரணமானது. மிகவும் அகங்காரத்துடன் யாருடைய அறிவுரையையும் கேட்க மறுத்த அவருக்கு சப்ளை முறைகள் பற்றி அதிகம் தெரியவில்லை. அதனால் அவருடைய குழு காடுகளில் தனித்து விடப்பட்டு, பட்டினி கிடைக்க நேர்ந்தது. பிடிபட்ட போது எலும்பும், தோலுமாக இருந்தார்.

3. சே, கியூபாவின் பொருளாதாரத்தை சீரழித்தார்

1959 ஆம் ஆண்டில் கியூபாவின் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவை வெளியேற்றுவதற்காக காஸ்ட்ரோவிற்கு சே உதவினார். ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, சித்திரவதை செய்து, பொது மரணதண்டனைகளை வழங்கியதால் கியூபர்களுக்கு பாடிஸ்டாவின் ஆட்சியின் கீழ் வாழ்க்கை மோசமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாடிஸ்டாவுக்குப் பிறகு வாழ்க்கை மேம்பட்டது என்ற கருத்து ஒரு முழுமையான கட்டுக்கதை.

1950-களில் கியூபா மோசமாக இருந்தது.ஆனால் அதன் பொருளாதாரம் உண்மையில் 1960 களில் மோசமடைந்தது. எடுத்துக்காட்டாக, தொழில்துறை மற்றும் விவசாய ஊதியங்கள் 1950-களில் கணிசமாக உயர்ந்தன, அவை ஐரோப்பாவில் ஊதியங்களுக்கு கிட்டத்தட்ட நிகராக இருந்தது. தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாளால் பாதுகாக்கப்பட்டனர், அவர்களுக்கு ஒரு மாத வருடாந்திர விடுப்பு வழங்கப்பட்டது, மற்றும் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்னும் பின்னும் 6 வார விடுமுறை வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 வெவ்வேறு தினசரி செய்தித்தாள்கள் இருந்தன, மேலும் கியூபர்கள் அதிக அளவு கார், வானொலி மற்றும் தொலைபேசி உரிமையைக் கொண்டிருந்தனர்.

குவேராவுக்கு நிதி மந்திரி மற்றும் தேசிய வங்கியின் தலைவர் ஆகியோரின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டவுடன் மோசமாக விஷயங்கள் மாறிவிட்டன. சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் முயற்சியில் வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களை தேசியமயமாக்குவது அவரது முதல் செயல்களில் ஒன்றாகும். அவர் மிக நீண்ட நேரம் பணியாற்றினார் ஆனால் குவேரா தொழிலார்கள் முன்பு அனுபவித்த பாதுகாப்புகளை அகற்றினார். அவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில், கியூபர்கள் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும், மேலும் அவர்கள் இலக்குகளை அடையத் தவறினால் அவர்களின் சம்பளத்தை பிடித்து விடுவார்கள். இலக்குகளை விட அதிகமாக செய்தால் பாராட்டுச் சான்றிதழ்கள் மட்டுமே கிடைத்தன.

உற்பத்தித்திறன் குறைந்து அவரது திட்டங்கள் முழுமையாக தோல்வி அடைந்தன. அவரது முன்னாள் பிரதிநிதிகளில் ஒருவர் கூறினார்: "குவேரா மிக அடிப்படையான பொருளாதாரக் கொள்கைகளை அறியாதவர்." கியூபா மாஸ்கோவிலிருந்து பெரும் பணப்பரிமாற்றத்தை நம்பியிருந்தது, அதற்கு பதிலாக, கியூபா சோவியத் அணு ஆயுதங்களுக்கான ஒரு கடற்கரையாக மாறியது. இறுதியில் தோல்வியடைந்த தொழில்களுக்கு வளங்களைத் திருப்புவதன் மூலம், கியூப பொருளாதாரத்தை அழிக்க உதவினார். இரண்டு ஆண்டுகளில், அவர் நாட்டின் சர்க்கரை அறுவடையை பாதியாக குறைத்து விட்டார்.

4. அவரது இறப்பு ஒன்றும் வீர மரணம் அல்ல

அவர் சாகும் போது, இதை சொன்னார் அதை சொன்னார் என பலவித கட்டுக் கதைகள் உலா வருகின்றன. உண்மையில் அவர் பொலிவியா ராணுவத்தால், காடுகளில் பிடிக்கப்பட்டு ஒரு பள்ளியில் கட்டப்பட்டிருந்தார். அங்கிருந்தவர்கள் கூற்றுப்படி அவர் கூறியது 'என்னை சுட வேண்டாம். நான் சே குவேரா. நான் இறப்பதை விட, உயிரோடிருப்பது தான் உங்களுக்கு அனுகூலம்.(worth)"

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஒருவர் சர்வாதிகாரியாகி, தன் மக்களையே லட்சக்கணக்கில் கணக்கில் கொல்ல வேண்டும் என்றால், அவர் கார்ல் மார்க்ஸ்ன் தத்துவப்படி நடப்பதாகக் கூறிக் கொள்ள வேண்டும். 'புரட்சியாளன்' என்ற சாயம் பூசி எளிதாக ஹீரோ ஆக்கி விடுவார்கள். ஸ்டாலின், மாவோ,சே,கொரியர் என பட்டியல் நீளும். மற்ற சர்வாதிகாரிகளுக்கு இந்த சாயம் அனுமதிக்கப்படுவதில்லை.

Cover Image courtesy: www.austenlennon.co.uk

Next Story
கதிர் தொகுப்பு
Trending News