வாழ்வை சிறப்பாக வாழ இவற்றை செய்யாதீர்கள்.!
வாழ்வை சிறப்பாக வாழ இவற்றை செய்யாதீர்கள்.!

உங்களை சுற்றியிருப்பவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்., எந்த இடத்திலும், எந்த தருணத்திலும், யாவரையும், தன் திறனால் ஆச்சர்யப்படுத்தும் வல்லமை எவர்க்கும் உண்டு.
புத்துணர்வுடன் துவங்கும் ஒவ்வொறு நாளும் நேற்றின் நினைவுகளை மிளிரசெய்கின்றன. இன்று நிகழ்விருக்கும் நம்பிக்கை தருணங்களை ஒளிர செய்கின்றன.
உங்களை பிறர் குறைத்து மதிப்பிடட்டுமே…? அதனாலென்ன. இதை செய்வதால், உங்கள் வல்லமை என்னவென்பதை அவர்கள் ஒரு போதும் அறியபோவதில்லை.
ஒருவரின் மெளனத்தை அறியாமை என்றும், ஒருவரின் அமைதையை ஏற்றுகொள்ளுதல் என்றும், ஒருவரின் கருணையை பலவீனம் என்றும் ஒருபோதும் தவறாக எண்ணிவிடாதீர்கள்
பிறரை போல் ஆக துடிப்பதன் மூலம் உங்களை நீங்களே மிக கடுமையாக குறைத்து மதிப்பிடுகிறீர்கள்
பெரும்பாலான மக்கள், தம்மால் ஒருநாளில் செய்ய முடிவதை குறித்து ஆதீதமாகவும், வாழ்நாள் முழுவதும் கூடியவைகளை குறித்து குறைவாகவும் மதிப்பிடுபவர்களே
அதிகாலை வாழ்த்துக்களை, மன்னிப்பு கடிதங்களை, எதேற்சையாக கிடைக்கும் பாராட்டுக்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
உங்கள் வாழ்வில் எப்போதும் புன்னகையை மலர்த்தும் .மனிதரின் முக்கியத்துவத்தை எதற்காகவும் குறைத்து மதிப்பிடாதீர்கள்
மெல்லிய தீண்டல், நுட்பமான புன்னகை, ஓர் கனிவான வார்த்தை, வார்த்தைக்கும் சாயும் செவி, நேர்மையான விமர்சனம், அல்லது அக்கறையின் சாயல் போன்றவற்றை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்
இவைகளுக்கு வாழ்க்கையையே சுழற்றி போடும் ஆற்றல் உண்டு