Kathir News
Begin typing your search above and press return to search.

தனது சொத்துக்களை யானைகளுக்கு எழுதிய முகமது அக்தர் இமாம் : உறவினர்கள் மிருக வதை செய்வதால் இந்த முடிவாம்.!

தனது சொத்துக்களை யானைகளுக்கு எழுதிய முகமது அக்தர் இமாம் : உறவினர்கள் மிருக வதை செய்வதால் இந்த முடிவாம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jun 2020 2:08 AM GMT

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் 50 வயதாகும் முகமது அக்தர் இமாம். இவருக்கு யானைகள் என்றால் ரொம்ப பிரியம். அவர் மோட்டி மற்றும் ராணி என்ற இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். அவரது குடும்பத்தினர் நீண்ட காலமாக யானைகளை வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் இருந்தே யானைகள் மத்தியில் வளர்ந்து வருவதாகவும், தங்கள் குடும்பத்தில் ஒருவராக யானைகளை பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தான் இறந்த பிறகு யானைகள் ஆதரவு இல்லாமல் உணவுக்காக அலையக் கூடாது என்றும், தனது உறவினர்கள் சிலர் விலங்குகளை வதைத்து வேட்டையாடுவதால் தனது சொத்துக்களை யானைகளுக்கு எழுதி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்தர் கூறுகையில், 'விலங்குகள் மனிதர்கள் போல் இல்லை. அவை உண்மையுள்ளவை. நான் யானைகளின் பாதுகாப்புக்காக பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறேன். நான் இறந்த பிறகு எனது யானைகள் ஆதரவற்று இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் தான் சொத்துக்களை யானைகளுக்கு வழங்கியுள்ளேன்' என கூறியுள்ளார். அரசாங்கம் யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வருங்காலத்தில் புத்தகங்களில் மட்டும்தான் அவற்றை பார்க்கும் நிலை ஏற்பட்டு விடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News