இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.!
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் இந்தியாவுக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இவருடைய பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் சிறப்பாக இருக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின் எந்த ஒரு போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இதனிடையே ஹர்திக் பாண்டியா பிரபல சீரியல் நடிகை செர்பியன் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலித்து வந்தனர். இந்த தகவலை 2020 புத்தாண்டு அன்று அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியீட்டு உறுதிப்படுத்தினர்.
இதன் பிறகு இவர்களுடைய திருமணம் ஊரடங்கு சமயத்தில் நடந்துள்ளது. அதே நாளில் அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டார். பிறகு அவரும் கர்ப்பமான அவருடைய மனைவியும் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்.
https://twitter.com/hardikpandya7/status/1288778836872634368