மத்திய மின்துறை அமைச்சகம்: புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த மூன்று காற்றாலை திட்டங்கள் திறப்பு.!
மத்திய மின்துறை அமைச்சகம்: புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த மூன்று காற்றாலை திட்டங்கள் திறப்பு.!

மத்திய மின்துறை அமைச்சர் R K சிங், 800 மெகாவாட் சக்தி கொண்ட மூன்று காற்றாலை திட்டங்களைத் தேசத்திற்கு அர்ப்பணிப்பதாக நேற்று (29 ஜூலை) மின்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலார் எனர்ஜி கார்பொரேஷன் ஆப் இந்தியா வழங்கிய இத்திட்டங்களை, சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்ட செம்ப்கார்ப் நிறுவனத்தைச் சேர்ந்த செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியா லிமிடெட் (SEIL) உருவாக்கியுள்ளது.
செம்ப்கார்ப் நிறுவனத்தின் அதிநவீன SECI 1,2 & 3 திட்டங்களைத் தேசத்திற்கு வழங்குவதாக வீடியோ கான்பெரென்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதன் 300 மெகாவாட் SECI 3 காற்றாலை திட்டத்தை முழுமையாக இயக்கியதன் மூலம், செம்ப்கார்ப் தனது முதல் மூன்று திட்டங்களை முழுமையாக ஆணையிட்ட முதல் தனிப்பட்ட மின் உற்பத்தியாளர் ஆனது என்று செம்ப்கார்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவையனைத்தும் 6,00,000 வீடுகளுக்கு மின்னாற்றலை வழங்கும் சக்தியுடையது என்றும் மற்றும் இரண்டு மில்லியன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதைத் தவிர்க்கக் கூடிய திறன் கொண்டது என்று கூறியுள்ளனர்.
SECI யின் இதுவரை இடைப்பட்ட ஏலங்களில் மிகப்பெரிய காற்று திறன் செயல்பாடுகள் இதுவேயாகும்.
எரிசக்தி மாற்றத்தை அடைவதற்கு அரசாங்கம் அனைத்து வகையிலும் உதவும். அந்தத் துறையில் தங்கள் கூட்டாளிகளுக்கு நேர்மை, வெளிப்படைத் தன்மை முதலியவற்றை அரசு உறுதிப்படுத்துகிறது என்று சிங் கூறினார். மேலும் அவர் SEIL நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் அரசை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அவர்களின் சேவைகளுக்காகவும், உறுதிக்காகவும் பாராட்டினார்.
SECI -யின் முதல் ஏலத்தின் படி செம்ப்கார்ப் 250 மெகாவாட் காற்றாலையைத் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நிறுவியது பின்னர் 250 மற்றும் 300 மெகாவாட் காற்றாலையை குஜராத்தில் உள்ள புஜ்ஜில் நிறுவியது.
source:https://swarajyamag.com/insta/boost-to-renewable-energy-three-wind-power-projects-with-800-mw-capacity-inaugurated