"லாபம்" படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய விஜய்சேதுபதி.!
"லாபம்" படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய விஜய்சேதுபதி.!
By : Kathir Webdesk
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த படம் புறம்போக்கு. அந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி வைத்து அடுத்ததாக தொடங்கப்படும் படம் "லாபம்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிக்கிறார். 2017ஆம் ஆண்டு சிங்கம் பார்ட் 3 இல் நடித்த ஷ்ருதி இரண்டு வருடங்கள் கழித்து நடிக்கவிருக்கும் படமாகும். இந்த படத்தில் சுருதிஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். லாபம் படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் கடந்த வருடம் நடக்க தொடங்கியது. ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படம் மீண்டும் டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் விஜய் சேதுபதி ஆர்வமாக டப்பிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.