நாள் குறிக்கப்பட்டது! இராஜஸ்தான் அரசியலில் எதிர்பாரா திருப்பு முனை - ஆளுநர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
நாள் குறிக்கப்பட்டது! இராஜஸ்தான் அரசியலில் எதிர்பாரா திருப்பு முனை - ஆளுநர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
By : Kathir Webdesk
குழப்பமான சூழல் நிலவி வரும் ராஜஸ்தான் அரசியலில் அடுத்து என்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்து வரும் வேளையில், சட்டசபை கூட்டத்தை கூட்ட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதியிலிருந்து சட்டசபை கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சச்சின் பைலட் கட்சியில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கொடிய தூக்கிய நிலையில், தனது அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் கூறி வருகிறார். அதனை நிரூபிக்க சட்டமன்றத்தைக் உடனடியாக கூட்ட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினார்.
ஆனால், சட்டமன்றத்தைக் கூட்ட 21 நாட்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்பது விதியாகும். அதனை மீறி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி, அசோக் கெலாட் கோரிக்கையை மூன்றாவது முறையாக ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா நிராகரித்து விட்டார்.
இந்நிலையில், அனைத்து விதிகளுக்கும் உட்பட்டும், அனைத்து விதமான கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றியும், ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறும் பட்சத்தில், இராஜஸ்தான் அரசியலில் பல்வேறு எதிர்பாரா திருப்பு முனை உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.