Kathir News
Begin typing your search above and press return to search.

சனாதனத்தை வேரறுப்போம் என்று சூளுரைத்து விட்டு இப்போது நாடகமா போடுகிறீர்கள்? ம.வெங்கடேசனின் பதிலடி!

சனாதனத்தை வேரறுப்போம் என்று சூளுரைத்து விட்டு இப்போது நாடகமா போடுகிறீர்கள்? ம.வெங்கடேசனின் பதிலடி!

சனாதனத்தை வேரறுப்போம் என்று சூளுரைத்து விட்டு இப்போது நாடகமா போடுகிறீர்கள்? ம.வெங்கடேசனின் பதிலடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 July 2020 3:58 AM GMT

கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் கந்தசஷ்டி கவசத்தைப் பற்றி இழிவாகப் பேசி தி.க, தி.மு.கவின் இந்து விரோதப் போக்கை இன்றைய தலைமுறையினருக்கு வெட்ட‌ வெளிச்சம் போட்டுக் காட்டி விட்ட நிலையில் தேர்தல் அச்சத்தில் தி.மு.க தாங்கள் இந்து விரோத கட்சி இல்லை என்று தொடங்கி இந்துக்கள் சுயமரியாதையோடு வாழ வழி வகுத்ததே தாங்கள் தான் என்று ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு பதிலடியாக இது வரை எப்படியெல்லாம் இந்துக்களையும் இந்து மதக் கடவுளர்களையும் தி.மு.க தலைவர்கள் ஏசி இருக்கின்றனர், இழிவுபடுத்தி இருக்கின்றனர் என்று பட்டியலிட்டிருக்கிறார் பா.ஜ.க தலைவரும் எழுத்தாளருமான ம.வெங்கடேசன். அவரது பதிவுகள் பின்வருமாறு,

"திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியே!

1. இந்து என்றால் திருடன் என்று கேவலப்படுத்தினார் கருணாநிதி.

2. இராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் என்று நக்கலடித்தார் கருணாநிதி.

3. முன்னாள் எம்.பி சங்கராபுரம் ஆதிசங்கர் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வேர்வையில் நனைந்து வழிந்தோடியபோது நெற்றியில் ரத்தம் சொட்டுகிறது என்று அவமானப்படுத்தினார் கருணாநிதி.

4. திமுகவில் கடவுள் பக்தி கொண்ட சிலபேர் இருக்கலாம். ஆனால் அதற்காக கோயில் விழாக்களில் தீ மிதிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நான் அனுமதிக்கமாட்டேன் என்று தீ மிதித்தலை கேவலப்படுத்தினார் கருணாநிதி.

5. சட்டமன்றத்தில் ஒருவர் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இறைவனைச் சுற்றித்தான் ஒளிவட்டம் இருக்குமே... பின் ஏன் அங்கு மின்சாரம். வழங்கப்படமாட்டாது என்று (29-12-96) நக்கலடித்தார் கருணாநிதி.

6. இந்து மத சன்னியாசிகளெல்லாம் சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் சேலை கட்டாத மாதரை நம்ப வேண்டும் என்றுதானே அர்த்தம்? என்று குதர்க்கமாக பேசி சன்னியாசிகளை அசிங்கப்படுத்தினார் கருணாநிதி.

7. திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று மடங்களை கேவலமாகப் பேசினார் கருணாநிதி.

8. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டைப் புராணங்களில் ஆண்டவனே மீறியிருக்கிறான். அதனால்தான் என்னவோ தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பிரச்சாரத்தில் இதை வலியுறுத்த முடியவில்லை என்று 1-3-97ல் கொச்சைப்படுத்திப் பேசினார் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

9. ஐயப்பன் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன். கலியுக வரதனாம். கதை உடறான் பாரு. ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பொறக்குமா.... சே... சே... எவ்வளவு மோசமான கற்பனை....

திமீர் பேச்சைப் பேசினார் அன்றைய நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன்.

10. கல்லுக்குப் பூசையா? என்று நக்கலடித்தார் அன்றைய திமுக அமைச்சர் முல்லை வேந்தன்.

11. திருமணத்தில் ஓதப்படும் மந்திரங்களை அசிங்கமான, கேவலமான மந்திரங்கள் என்று திருமண மேடையிலேயே மந்திரங்களை கொச்சைப்படுத்தினார் ஸ்டாலின்.

12. முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்கள் என்று கேவலப்படுத்தினார் ஸ்டாலின்.

13. தன் நெற்றியில் வைத்த விபூதியை உடனே அழித்து அவமானப்படுத்தினார் ஸ்டாலின்.

14. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியதாக வந்த செய்தியை உடனே அது தான் அப்படி கூறவில்லை எனவும் அதில் தனக்கு விருப்பமில்லை எனவும் அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின்.

15. நாத்திகர் மாநாட்டில், திருப்பதி வெங்கடாசலபதியை நக்கலடித்தார் கனிமொழி.

16. இதுவரை விநாயகர் சதுர்த்திக்கோ, தீபாவளிக்கோ, கிருஷ்ணர் ஜெயந்திக்கோ, ராமநவமிக்கோ திமுக சார்பில் வாழ்த்துத் தெரிவித்ததில்லை.

17. விடுமுறை தின நிகழ்ச்சிகள் என்று தங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி விழாக்களை அசிங்கப்படுத்தினர் திமுகவினர்."

இதெல்லாம் போதாதென்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினும்‌ அவரது கூட்டணிக் கட்சியினரும் சனாதனத்தை வேரறுப்போம் என்று இந்திய முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற பிற மத‌ அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்து சூளுரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News