ராகுல் டிராவிட்டின் சாதனையை வெளியிட்ட ஐசிசி - இந்தியாவின் டெஸ்ட் ஜாம்பவான்.!
ராகுல் டிராவிட்டின் சாதனையை வெளியிட்ட ஐசிசி - இந்தியாவின் டெஸ்ட் ஜாம்பவான்.!

By : Kathir Webdesk
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ராகுல் டிராவிட் நிகழ்த்திய சாதனையை ஐசிசி ட்விட்டரில் வெளியிட்டது.
1996 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் விளையாடிய ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டிராவிடை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் சச்சின் மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர் காலீஸ் விளையாடி உள்ளனர். ஆனால் இவர்களை விட டிராவிட் டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
https://twitter.com/ICC/status/1281792837344989189
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 29,437 பந்துகளையும் மற்றும் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய காலீஸ் 28,903 பந்துகளை எதிர்கொண்டு உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரையும் விட குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட் 31, 758 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
https://twitter.com/axelblazelove/status/1281795409590067200
இதனைப்பற்றி ஐசிசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்; 31,758 பந்துகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ஒரே வீரர் ராகுல் டிராவிட். இது வரை வேற யாரும் 30,000 பந்துகளை எதிர்கொண்ட தில்லை. ஒவ்வொரு டெஸ்ட் போட்டிலும் டிராவிட் 190.6 பந்துகளை விளையாடியுள்ளார் என பதிவிட்டுள்ளது.
