Kathir News
Begin typing your search above and press return to search.

என்ன ஆயிற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் உடல்நிலைக்கு?

என்ன ஆயிற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் உடல்நிலைக்கு?

என்ன ஆயிற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் உடல்நிலைக்கு?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 10:58 AM GMT

மனிதனின் வயது காரணமாக முதுமையில் உடல் தோற்றங்கள் மாறுபடுவதும், தோற்ற பொலிவு குறைவதும் இயல்புதான். அதிலும்

அரசியலில் களமாடும் தலைவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் வருவது தவிர்க்க முடியாதது. அதிகமான பிரயானம், தொடர் சிந்தனைகள், மன அழுத்தங்கள் போன்றவற்றினால் உடலின் தோற்றத்தில் வித்தியாசம் வருவது இயற்கையின் படைப்பு அதை மிஞ்ச மனித பிறவியால் முடியாது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக சிலர் சில நாட்களிலே முன்பு இருந்த தோற்றத்தை முற்றிலும் இழந்து வருவதை காண்பது என்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஏதோ பாதிப்பு என யோசிக்க வைக்கும். அந்த வகையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமீபத்திய தோற்ற அமைப்பு அத்தகைய கேள்விகளைதான் முன் வைக்கிறது.

மார்ச் 24'ல் கொரோனோ ஊரடங்கு காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பிறகு உலக மக்களின் வாழ்க்கை முறையே மாறியது. இதில் அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தப்பவில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் தோற்றமோ முற்றிலும் வித்தியாசமாக தெரிகிறது. தலை முடி அதிகம் இழந்து விக் வைக்க வேண்டிய நிலை, கண்கள் சுருங்கி, கண்ணங்கள் உப்பலான நிலையை எட்டி, கழுத்து பகுதியில் தோல் பிடிப்பு பகுதிகள் சுருங்கி அவரின் தோற்றமே மாறிவிட்டது. 1953'ல் பிறந்த அவர் கடந்த மார்ச் 1 தேதி முடிய 67 வயதை கடந்து விட்டார், வயதின் காரணம் என்று இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை காரணம் வயது மூப்பின் காரணமாக உடலில் மாற்ற நிகழ்வது என்பது வெறும் 3 மாதங்களில் தெரியாது. மாறாக மெதுவாக உருவ அமைப்பு ஒர் நிலைக்கு மாறும் அது பார்பவரின் கண்களுக்கு உடனடி மாற்றமாக இல்லாமல் பார்த்து பார்த்து பழகிய அளவில் இருக்கும் ஆனால் இவரின் இந்த மேற்கூறிய முக மற்றும் கழுத்து பாகங்களின் மாற்றமானது கடந்த 3 மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக மாறிவிட்டது. மூன்று மாதங்களிலா அவ்வளவு வயதான தோற்றம் வந்துவிடும்?

அரசியல் அரங்கில் அனைவரும் முக்கியமானவர்கள் ஆளும்கட்சி சரிவர இயங்க எதிர்கட்சி'யின் பங்கு அதிமுக்கியம் எனவே ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை! அந்த வகையில் கவலையுடன் கேட்கிறோம் ஸ்டாலின் அவர்களே! என்ன ஆயிற்று உங்கள் உடல்நிலைக்கு? தனக்கு சிறு மருத்துவ மாற்றங்களோ, உடல் நிலை சரியில்லாத பொழுதுகளோ இருந்தபொழுதும் கூட பழைய தி.மு.க தலைவரும் உங்கள் தகப்பனாருமாகிய கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அதை கடைசி வரை வெளிப்படையாகவே கூறி வந்தார். தான் நினைவுள்ளவரை முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்ட அவர் கட்சி வேறு தான் வேறு என்று நினைக்காமல் தன்னுடைய முடிவாகட்டும், உடல் நிலையாகட்டும் அது கடைசி தொண்டனுக்கும் தெரிய வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கரை அளவில்லாதது. ஏன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மருத்துவ நிலையை ஒரு புகைப்படமாவது காண்பிக்க கூடாதா என்று முதலில் கேள்வி எழுப்பியவரும் அவரே! அந்த வகையில் அவரின் கட்சி பணிகளை கையில் எடுத்துள்ள நீங்கள் அவரின் மகனும் கூட அந்த பண்பு உங்களிடமும் உள்ளது என்பதை நினைத்து கேட்கிறோம். "என்ன ஆயிற்று ஸ்டாலின் அவர்களே உங்கள் உடல்நிலைக்கு?" ஏதேனும் இருப்பினும் பார்த்துக்கொள்ளுங்கள் பத்திரமாக! எதிரெதிர் துருவங்களின் விசையே இயக்கத்திற்க்கு அடிப்படை தேவை"

Next Story