அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடியுடன், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் கலந்து கொள்வாரா?
அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடியுடன், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் கலந்து கொள்வாரா?
By : Kathir Webdesk
அயோத்தியில் ராமர் கோயில் காட்டுவதற்கான 'ராம் ஜென்ம பூமி' இயக்கத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான லால் கிருஷ்ணா அத்வானி, ஜன்மபூமியில் ராமர் கோயிலின் பூமி பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் வருவார் என்று ரிபப்லிக் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
1980 களின் பிற்பகுதியில் L.K அத்வானி ராமர் கோயில் இயக்கத்தை பொது மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். 1990 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை அவர் பிரபலமான ராமர் ரத யாத்திரையை வழிநடத்தினார் - இது நவீன இந்தியாவின் மிகப்பெரிய வெகுஜன இயக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பூமி பூஜை, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாரணாசியைச் சேர்ந்த துறவிகள் நடத்தும் மூன்று நாள் வேத சடங்குகளுடன் நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் 40 கிலோ வெள்ளி செங்கலை கருவறையில் வைப்பதும் அடங்கும்.
பூமி பூஜைக்கு தேதிகள் இன்னும் குறிப்பாக முடிவு செய்யப்படவில்லை. ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகியவை பூஜையின் புனித தேதிகளாக பிரதமர் மோடிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்ளவுள்ளார். சிவ சேனா முதல்வர் உத்தவ் தாக்கரே தன்னையும் அழைக்குமாறு, ராம் ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு கடிதம் எழுதியுள்ளார்.