Kathir News
Begin typing your search above and press return to search.

முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் "ஜோடி சேரும்" அனுஷ்கா ஷெட்டி.!

முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் "ஜோடி சேரும்" அனுஷ்கா ஷெட்டி.!

முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா ஷெட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 6:51 AM GMT

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய முன்னணி நடிகரான விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா. அவர் இப்போது நடித்துள்ள படம், சைலன்ஸ் (நிசப்தம்). இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நடித்து வெளியாக இருக்கும் நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதா, தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருப்பதா என்று தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த படத்திற்கு பிறகு அனுஷ்கா எந்த படங்களை ஒப்புக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது மேலும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறியிருந்தார்.. கொரோனா காரணமாக இந்தப் படம் எப்போதும் தொடங்கும் என்று தெரியவில்லை. அனுஷ்கா எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கும் நடிகை நடிப்பை விட்டு விலகப் போவதாக டோலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகி இருந்தன.

விஜய் சேதுபதி, இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படமும் அடுத்து நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் விரைவில் வெளியாக இருக்கின்றன. இதையடுத்து ஜனநாதன் இயக்கும் லாபம், வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News