Kathir News
Begin typing your search above and press return to search.

பெரியாரிஸ்டுகளை எதிர்த்து 'தில்'லாக நிற்கும் ரஜினிகாந்த்!! பெருகும் ஆதரவு....!

பெரியாரிஸ்டுகளை எதிர்த்து 'தில்'லாக நிற்கும் ரஜினிகாந்த்!! பெருகும் ஆதரவு....!

பெரியாரிஸ்டுகளை எதிர்த்து தில்லாக நிற்கும் ரஜினிகாந்த்!! பெருகும் ஆதரவு....!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 9:04 AM GMT

இந்தியாவில் அதிகமான கோவில்களை கொண்ட மாநிலங்களில் ஒன்று தமிழகம். இத்தகைய நிலையில் ரஜினிகாந்த் போன்ற ஆன்மீகம் சார்ந்த தலைவர்கள் அரசியலுக்கு வருவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ரஜினிகாந்த் வலதுசாரி அரசியல் அணுகுமுறை கொண்டவர் என்பது அவரின் கருத்தின் மூலம் தெரியவருகிறது.

சமீபத்தில் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வெளிவந்த காணொளியை கண்டித்து தமிழக அரசு. அக்காணொளி வெளியிட்ட வலைக்காட்சியை தடைசெய்துள்ளதை வரவேற்று இருந்தார் ரஜினிகாந்த்.

கருப்பர் கூட்டம் என்னும் வலைகாட்சி வாயிலாக, கந்த சஷ்டி கவசம் பற்றி ஆபாசமாக வெளியிட்டிருந்தனர். இதற்கு பாஜக அவரின் மீதும், வலைக்காட்சி மீதும் வழக்கு தொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதில் தொடர்புள்ள இருவரும் கைது செய்யப்பட்டனர். இதைப்பற்றி ரஜினிகாந்த் அவர்கள் ட்விட்டரில் வலைக்காட்சியை கண்டித்தும் தமிழக அரசின் உடனடியான நடவடிக்கைக்கும் நன்றி தெரிவிக்கும்படி கருத்து தெரிவித்திருந்தார்.

இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடப்பதாகவும் இதுபோன்ற செயல்கள் திரும்பவும் நடக்கக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ரஜினிகாந்த், கடந்த ஜனவரி மாதம் பெரியார் போன்றவர்கள் 1971ம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போது 'ராமர் சீதையை' அவமதித்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தையும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததற்கு வரவேற்பு தெரிவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய செயல்களின் மூலம் ரஜினிகாந்த் தமிழகத்தில் இந்து தேசியவாதம் மற்றும் பெருமையை நிலை நாட்டுகிறார் என்பது தெரியவருகிறது. பலமுறை பாஜக ரஜினிகாந்தை இணைப்பதற்கு முயற்சி செய்தும் அவை நடக்கவில்லை. சாதி அரசியலினால் மூழ்கியுள்ள தமிழகத்திற்கு ரஜினிகாந்த் போன்ற ஆன்மீகம் சார்ந்த அரசியல்வாதிகள் வருவதினால் ஹிந்து சமுதாயத்திற்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அறியப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News