மறைந்த நடிகரின் தம்பிக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி.!
மறைந்த நடிகரின் தம்பிக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி.!

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியும் ,கன்னட நடிகருமான துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோானா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தி இருக்கின்றனர்.
மேலும் இது குறித்து துருவா சார்ஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா உள்ளது என்றும் மேலும் என்னுடன் இருந்தவர் அவர்கள் அனைவரும் கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா டெஸ்ட் செய்து கொள்வதன் மூலம் பாதுகாப்புடன் இருக்கலாம் என்றும், பயப்பட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் துருவா சார்ஜா தனது சிறு வயது தோழியான பிரேரானா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 9ம்தேதி திருமணம் செய்துக் கொண்டார். மேலும் இவர் தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்துள்ள "பொகரு" படம் திரைக்கு வர காத்திருக்கிறது. அந்த பாடல்கள் சர்ச்சைக்குள்ளாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கொரோனா என்று அறிந்ததும் ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் இருக்கிறார்கள். மேலும் இது குறித்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.