Kathir News
Begin typing your search above and press return to search.

பாலிவுட் பழம்பெரும் நடிகை மரணம் - கண்ணீரஞ்சலி செலுத்தும் திரை உலகினர்.!

பாலிவுட் பழம்பெரும் நடிகை மரணம் - கண்ணீரஞ்சலி செலுத்தும் திரை உலகினர்.!

பாலிவுட் பழம்பெரும் நடிகை மரணம் - கண்ணீரஞ்சலி செலுத்தும் திரை உலகினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 12:44 PM GMT

2020 ஆரம்பித்ததிலிருந்து பல நடிகர்கள் இறந்த செய்திகள் ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் இர்பான் பதான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை ஆகியவை ஒட்டுமொத்த திரையுலகையே வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டும் சின்னத் திரை நட்சத்திரங்களும், பெரிய பிரபலங்களும் பாதிக்கப்பட்ட சிலர் இறப்பதும் ஆக இருக்கிறது இது ரசிகர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பாலிவுட் பழம்பெரும் நடிகையான கும்கும் மரணம் அடைந்திருப்பது வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.ம் 1954-ம் ஆண்டு வெளியான ஆர் பார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் இவர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதர் இந்தியா,உஜாலா, சன் ஆஃப் இந்தியா, கோகினூர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்.

இவர் சாஜித் அக்பர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் அதன் பின் படத்தில் நடிப்பதையே இவர் விட்டுவிட்டார்.தற்போது 86 வயதாகும் கும்கும் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் நேற்று காலை 11.30 மணியளவில் உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்கு மஜ்காவ் தகன மையத்தில் நடைபெற்றது. மூத்த நடிகையான கும்கும்-க்கு இந்தி பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News