Kathir News
Begin typing your search above and press return to search.

கடத்தல் குருவி ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கர்களில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணமும், ஒரு கிலோ தங்கமும் பறிமுதல்! சிக்கப்போகும் அதி முக்கிய அரசியல் புள்ளி.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 5:14 AM GMT

கேரளா மாநிலத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரிலிருந்து 1கோடி ரூபாய் பணமும், 1கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் மூலமாக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை ஹவாலா பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கேரளாவிலுள்ள ஐக்கிய அமீரக தூதரகத்தின் பெயரில், சுமார் 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில், முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமான சுவப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

அவரது கூட்டாளிகளான ரமீஸ், சந்தீப் உட்பட 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வழக்கை என்.ஐ.ஏ மற்றும் சுங்க துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

முறைகேடாக கடத்தப்பட்ட தங்கம், தமிழகத்தில் திருச்சியிலுள்ள பிரபல நகை கடைக்கு விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே போல மகாராஷ்டிராவிலுள்ள ஷாங்கிலி என்ற பகுதியிலும் விற்கப்பட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் சுவப்னா சுரேஷின் 2 வங்கி லாக்கரில் இருந்து, சுமார் 1கோடி ரூபாய் ரொக்கம், 982 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.

தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மாநில முன்னாள் ஐ.டி. துறை செயலர் சிவசங்கரிடம் மீண்டும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் தங்கம் மூலம் பெறப்பட்ட பணத்தை ஹவாலா பணமாக மாற்றி, ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை நடந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News