கோப்ரா படத்தில் வில்லனாக நடிக்கும் கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான்.!
கோப்ரா படத்தில் வில்லனாக நடிக்கும் கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான்.!

By : Kathir Webdesk
விக்ரம் நடித்து வரும் 58வது படமான இந்த படத்தில் விக்ரம் 20 தோற்றங்களிலில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனையடுத்து இந்தப் படத்தை முடித்துவிட்டு "பொன்னியின் செல்வன்" படத்திற்கு நடிக்கவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் விக்ரம் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இவருக்கு கதாநாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார்.மேலும் விக்ரமுக்கு வில்லனாக கிரிக்கெட் "வீரரான இர்பான் பதான்" நடிக்கிறார்.இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை பற்றி பல அறிவிப்புகள் வந்த மயமே உள்ளன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்துள்ளன.
இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கொல்கத்தாவில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இன்டர்போல் அதிகாரியாகவும் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. விக்ரம் நடித்திருந்தாலும் அந்த படம் செம ஹிட்டாகும் அதற்குரிய கிரிக்கெட் வீரர் நடித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகும் போது மிகப்பெரிய வெற்றி வாகை சூடும் என்பது தெரியவரும்.
