சாணத்தில் குளிப்பாட்டி, கேக் வெட்டி வினோத முறையில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய வாலிபர்கள் - குமரியில் பரபரப்பு.!
சாணத்தில் குளிப்பாட்டி, கேக் வெட்டி வினோத முறையில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய வாலிபர்கள் - குமரியில் பரபரப்பு.!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரம்பை பகுதியைச் சேர்ந்தவர் பெபிஸ் (வயது 21). இவருக்கு நேற்று முன்தினம் 21-வது வயது பிறந்தநாள். பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர் அவருடைய நண்பர்கள். பெபிசை, அவருடைய நண்பர்கள் சட்டையை கழற்றி விட்டு மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். நண்பர்கள் ஒவ்வொருவராக முட்டைகளை பெபிஸ் மீது உடைக்கின்றனர்.
முட்டையை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நண்பர்கள் குங்குமத்தை கரைத்து குளியல் நடத்தினர். தக்காளி பழத்தை தேய்த்தனர். தயிரால் அபிஷேகம் செய்தனர். சாணத்தை கரைத்து ஒரு வாளியில் எடுத்து வந்து பெபிஸ் தலையில் ஊற்றினார். பின்னர் ஷாம்பு குளியல் நடத்தினர்.
பிறகு பெபிஸ் புத்தாடை அணிந்தார். கேக் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டியதுடன் அவரும் சாப்பிட்டார். பிறந்த நாள் கொண்டாட்டம் அரங்கேறி முடிந்தது. அதனை வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் அரங்கேறிய இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.