கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரிக்கை : தமிழகம் முழுவதும் பா.ஜ.க. வினர் வீடுகளில் இருந்தே ஆர்பாட்டம்.!
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரிக்கை : தமிழகம் முழுவதும் பா.ஜ.க. வினர் வீடுகளில் இருந்தே ஆர்பாட்டம்.!

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் அவரவர் வீடுகளில் அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த கோரி தமிழக பா.ஜ.க.தலைவர் முருகன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும், முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல்கள் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர் என்றும் சுரேந்திர நடராஜன் போன்ற கபடதாரிகளை கண்டித்தும், இவரை தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கோவையில், அவரவர் வீடுகளுக்கு முன்பாக அற வழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் தனது வீட்டில் வைத்து அற வழி ஆர்ப்பாட்டம் செய்தார்.இதே போல மாவட்ட செயலாளர் கவிதா ராஜன் இராமநாதபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அறவழி கண்டனப் போராட்டம் நடத்தினார்.இதே போல கோவையில் உள்ள பாஜ.கவினர் பல்வேறு இடங்களில் அவரவர் வீடுகளில் அறவழி ஆர்ப்பாட்டம் செய்தனர்.