எம்.எஸ் டோனியின் சாதனைகள் - இதை முறியடிக்க முடியாமா ?
எம்.எஸ் டோனியின் சாதனைகள் - இதை முறியடிக்க முடியாமா ?

இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் 39வது பிறந்தநாள். இவருடைய பிறந்தநாளுக்கு விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வளையதளத்தில் பட்டைக்கிளம்பும் ரசிகர்கள்.
டோனி இந்திய அணியின் கேப்டனாக 2007ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் பல கோப்பைகள், பல சாதனைகள், பல வெற்றிகளை கேப்டனாக பெற்றுள்ளார்.
எம்எஸ் டோனி கேப்டனாக இருந்து இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் 110 போட்டிகளையும், 60 டெஸ்ட் போட்டிகளில் 27 போட்டிகளையும் மற்றும் டி20யில் 72 போட்டிகளில் 41 போட்டிகளையும் வெற்றி பெற்று உள்ளார்.
டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.
மேலும், டி20யில் அதிக போட்டிகளை (41) வென்ற கேப்டன் என்கிற சாதனையை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 110 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 165 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
199 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த டோனி இந்தியாவில் அளவில் முதல் இடத்தையும் உலக அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 100க்கும் மேற்பட்ட ஸ்டம்பிங்களை செய்த முதல் விக்கெட் கீப்பர் டோனி தான். போட்டிகளை பற்றி கணிப்பதில் வல்லவர்.
இந்த சாதனைகளை பின்னல் வரும் கேப்டன்கள், தற்போது கேப்டன்களால் முறியடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. எனவே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகேந்திரசிங் டோனி.