அயோத்தி: ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவில் யார் விருந்தினர்கள்? இதோ பட்டியல்.!
அயோத்தி: ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவில் யார் விருந்தினர்கள்? இதோ பட்டியல்.!

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் பூமி பூஜைக்கு, மூத்த தலைவர்களான L.K அத்வானி, M.M ஜோஷி, உமாபாரதி, மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத் முதலியோரை ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா ஆறக்கட்டளையினர் அழைத்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள புனித விழாவை தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும், என்று அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா உறுதிப்படுத்தியுள்ளார் .மேலும் அவர் , அனைத்து மதத்தலைவர்களை அழைக்கவுள்ளதாக கூறியுள்ளனர்
கொரோன நோய்த்தொற்று பரவாமலிருக்க இந்நிகழ்வில் 200 பேர் மட்டும் கூடவுள்ளதாக அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து இவ்விழா நடைபெறும், என்றும் கூறியுள்ளனர் .
அந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Source: https://swarajyamag.com/insta/ayodhya-lk-advani-mm-joshi-uma-bharti-and-mohan-bhagwat-among-invitees-for-ram-temples-bhoomi-pujan