Kathir News
Begin typing your search above and press return to search.

"நல்லவரா அப்ப எங்களுக்கு ஆகாது!" தி.மு.கவின் லேட்டஸ்ட் கொள்கை - அண்ணாமலை ஐ.பி.எஸ்.!

"நல்லவரா அப்ப எங்களுக்கு ஆகாது!" தி.மு.கவின் லேட்டஸ்ட் கொள்கை - அண்ணாமலை ஐ.பி.எஸ்.!

நல்லவரா அப்ப எங்களுக்கு ஆகாது! தி.மு.கவின் லேட்டஸ்ட் கொள்கை - அண்ணாமலை ஐ.பி.எஸ்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 8:35 PM IST

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். விவசாய குடும்பத்தை சார்ந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். இவரது 10 வருட ஐ.பி.எஸ் பணியில் காட்டிய அதிரடி நடவடிக்கை மற்றும் நேர்மையின் காரணமாக அண்ணாமலை 2018ம் ஆண்டுக்குள் டி.சி.பியாக பதவி உயர்வு பெற்றார். தற்பொழுது அவர் தனது ஐ.பி.எஸ் பணியை துறந்து விவசாயத்தில் ஈடுபட்டு விரைவில் அரசியலிலும் ஈடுபடுவார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் இவரது பயணம் தற்பொழுது அனைவராலும் விமர்சிக்கபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தி.மு.க'வின் விமர்சனங்கள் அதிகமாகவே உள்ளன. "இவர் ஏன்?", "நாட்ல இருக்குற ஆளுங்க பத்தாதா?", "ஏன் மீடியா இவரை தூக்கி கொண்டாடுது?" என்ற எதிர்மறையான விமர்சனங்களை தி.மு.க வைக்கிறது. ஏன் இவ்வாறு தி.மு.க விமர்சிக்கிறது என்று யோசித்தால் அதற்கு இன்றைய அவரின் தனியார் தொலைக்காட்சி பேட்டி மூலம் நிறைய பதில்கள் கிடைத்தன.

இன்றைய பேட்டியில் அவர் கூறிய அனைத்துமே தி.மு.க'வில் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதவை! முதலிலேயே அவரின் பேச்சு "எனக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பிடிக்கும். ஒரு ஜனநாயக நாட்டில் சாதரண ஆள் கூட பிரதமர் பதவியில் இருக்க முடியும் என்பதற்கு மோடி அவர்கள் ஓர் உதாரணம்" என உண்மையை கூறினார். இந்த ஒற்றை வரி போதுமே தி.மு.க உடன்பிறப்புகளுக்கு. இன்றைய தேதிக்கு மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியை வந்து மோடியை பற்றி ஆதரவாக பேசினால் அவரிடமே சண்டைக்கு போகும் அளவிற்க்கு மோடி அவர்களின் மீது தி.மு.க'விற்கு பயம் உள்ளது இந்த நிலையில் அண்ணாமலை கூறினால் என்னவாகும். உடன்பிறப்புகளின் பரம எதிரி ஆகிவிட்டார் அண்ணாமலை அவர்கள்.

மேலும் அவரின் கருத்துக்கள் தான் இன்னும் ஹைலைட்டே, "குடும்ப அரசியல் தவறு" என்றார். இது போதாதா உடன்பிறப்புகளுக்கு? மு.கருணாநிதி மகன் ஸ்டாலினை தலைவராக்கி அடுத்த தலைவராக உதயநிதியை நியமிக்க இப்பொழுதே ரிசர்வேஷன் செய்து வைத்திருக்கும் உடன்பிறப்புகளுக்கு இவரின் இந்த "குடும்ப அரசியல் தவறு" என்கிற ஒற்றை வரி அடிபட்ட இடத்தில் மீண்டும் கடிபட்டது போல் ஆகிவிட்டது. இவை இரண்டு காரணங்கள் போதாதா வாழ்நாள் முழுவதும் அண்ணாமலையை உடன்பிறப்பு'கள் வசவு பாட?

இவை எல்லாவற்றையும் விட உடன்பிறப்புகளின் காதில் புகை வரும் அளவிற்க்கு அவரின் மற்றொரு கருத்து அமைந்நது. ஆம் "ரஜினி அவர்களின் அரசியல் வருகையை வரவேற்கிறேன்" என்பதே அது! இத்தகைய 3 விஷயங்கள இன்று விவாதிப்பவர்களை கூட தி.மு.க'வின் எதிரியாக பார்க்கும் மனநிலையில் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு இத்தகைய விஷயங்களை ஆணித்தரமாக கூறும் ஓர் மனிதனை உடன்பிறப்புகள் எவ்வாறு மரியாதையாக நடத்துவார்கள்?

அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்கள் மோடியை பிடிக்கும் என்று சொன்னதற்க்கு வெறுப்பு வந்தால் பரவாயில்லை உடன்பிறப்புகளே அதை அரசியல் என்று எடுத்துக்கொள்ளலாம் மாறாக அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்கள் நல்லவர் என்பதற்காக பிடிக்காமல் போனார் மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது உடன்பிறப்புகளே.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News