மன்னன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்!
மன்னன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிகள் ஒருவரான நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க உருவெடுத்திருக்கிறார். அதனை அடுத்து அவர் சில படங்கள் கதாநாயகனாகவும் நடித்து வெளிவந்துள்ளன.
தற்பொழுது பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜ சிம்ஹா எனும் மன்னன் கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
இவன் தந்திரன்,ஜெயங்கொண்டான்,பூமாராங்,கண்டேன் காதலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன். இவர் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திருக்கும் படம் பிஸ்கோத்.
இந்தப்படத்தில் சந்தானம் ஒரு மன்னன் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சி 30 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வரும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர் ஆனால் இதற்காக ஒரு மாத காலமாக அவர்கள் கடின உழைப்பின் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
மன்னன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரியும், சுவாதி முப்பாலாவும் நடித்துள்ளனர்.துணை கதாபாத்திரங்களாக ஆனந்த் ராஜ், லொள்ளு சபா மனோகர், மொட்டை ராஜேந்திரன் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட
துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகள் ராஜா குமார் கைவண்ணத்தில் ராமோஜி படப்பிடிப்புத் தளத்தில் அரண்மனை போல் செட்டிங் போட்டு படம் எடுக்க இருப்பதாக கூறுகின்றனர்.
இயக்குனர் கண்ணன் கூறுகையில் ஓரளவிற்கு படம் முழுமையாக எடுத்துள்ளதாகவும்,சினிமா பணிகளுக்கு அனுமதி அளித்தவுடன் மீதமுள்ள பணிகளை தொடர வேண்டும். சந்தானம், அவருக்கான டப்பிங் வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டார். மேலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்து படமாகவும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் கொரோனா காலங்களில் மக்களுக்கு ஏற்ற நல்ல படமாக இருக்கும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.