வீழ்ச்சியைச் சந்திக்கும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவன பங்குகள் - மக்களின் சீன எதிர்ப்பு மனநிலையின் எதிரொலியா?
வீழ்ச்சியைச் சந்திக்கும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவன பங்குகள் - மக்களின் சீன எதிர்ப்பு மனநிலையின் எதிரொலியா?

எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற அளவுக்கு இந்திய- சீன எல்லையில் பதட்டம் நிலவி வரும் நிலையில் இந்திய சந்தைகளை ஆக்கிரமித்து வந்த சீன மொபைல் போன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Counterpoint Research என்ற சந்தை நிலவரத்தை ஆய்வு செய்யும் அமைப்பு நடத்திய ஆய்வில் ஜூன் 30-ம் தேதி முடிவடைந்த காலாண்டில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவன பங்குகளின் மதிப்பு 81 சதவீதத்திலிருந்து 72 சதவீதமாக வீழ்ச்சி அடைந்ததாக தெரியவந்துள்ளது. இதற்கு இந்திய மக்களிடையே அதிகரித்துள்ள சீன எதிர்ப்பு மனநிலையே காரணம் என்று கருதப்படுகிறது.
COVID-19 பெருந் தொற்றால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையாலும் அதை எதிர்கொள்ள அமல்படுத்தப்பட்ட ஊடகங்காலும் பல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஸ்மார்ட்போன் சரக்குப் பெட்டக வருகை 51% குறைந்து 18 மிலிலியன் அலகுகள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான Xiaomi, Oppo, Vivo, OnePlus மற்றும் Lenovo ஆகியவை இந்தியாவை லாபகரமான, பெரிய சந்தையாக பார்த்து வரும் நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல், அதன் பின்னர் சீனா நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றால் மக்களிடையே எழுந்துள்ள சீன எதிர்ப்பு மனநிலை இந்நிறுவனங்களின் குறிக்கோளுக்கு தடையாக அமையும் என்று கருதப்படுகிறது.
சீனாவை நம்பி இருப்பதை மாற்றும் வகையிலும் அதன் அமெரிக்க எதிர்ப்பு நிலை காரணமாகவும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.