ஊராட்சி செயலாளரை செருப்பை தூக்கி வரச்செய்த ஆம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ - களமிறங்கியது தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம்!
ஊராட்சி செயலாளரை செருப்பை தூக்கி வரச்செய்த ஆம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ - களமிறங்கியது தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம்!

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளரை செருப்பை தூக்கி வரச்செய்த ஆம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன் மீது தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிந்துள்ளது!
ஆர்.எஸ்.பாரதி,தயாநிதி மாறன்,பி.டி.ஆர் வரிசையில் திமுகவின் நவீனத் தீண்டாமைக்கு இது மற்றும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
சமூகநீதிக் காவலர்களான திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இதைக் கண்டிக்கும் தைரியமோ துணிச்சலோ கிடையாது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் இதற்கு ஒரு தோழமைச் சுட்டுதல் கூட கிடையாதா? என்று நினைத்து பார்க்கும் போது, அவர்களின் விஸ்வாசம் மெய் சிலிர்க்கச் செய்கிறது.
சம்பவத்தின் பின்னணி:
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி கிராமத்தில், மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடுவதற்காக, தி.மு.க., - எம்.எல்.ஏ., வில்வநாதன், 30 ஆம் தேதி சென்றார்.
பாதை சேறும், சகதியுமாக இருந்ததால், தன் செருப்பை கழற்றிவிட்டு, வெறும் காலில் நடந்து சென்றார். அப்போது, வெங்கடசமுத்திரம் ஊராட்சி, தி.மு.க., செயலர் சங்கர், எம்.எல்.ஏ.,வின் செருப்பை கையில் துாக்கி சென்றார்.
தற்போது, இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகியை, செருப்பை துாக்கி வரச்சொல்வதா? சமூக நீதி பேசும், தி.மு.க.,வின் உண்மை முகம் இதுதான் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.