வனிதாவின் பெயரை பச்சை குத்தினேன். அதை சில வாரங்களிலேயே அழித்துவிட்டேன் - ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்.!
வனிதாவின் பெயரை பச்சை குத்தினேன். அதை சில வாரங்களிலேயே அழித்துவிட்டேன் - ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்.!

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார். இவர் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பட வாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். ஆகாஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் பிறந்தனர். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் பிறந்தது.
இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்த வனிதா அதன் பின்னர் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை காதலித்து வந்தார். தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் ராபர்ட் பேட்டி ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். சிவாஜி எம்ஜிஆர் ரஜினி என்ற படத்தை நானும் வனிதாவும் சேர்ந்து இயக்கி வந்தோம். ஆனால் இயக்குனர் என்ற பெயரில் நான் என் பெயரை போட்டுக் கொள்ளவில்லை. வனிதாவின் பெயர் மட்டுமே இருந்தது. அப்போது என் அப்பாவிற்கு என்னை ஹீரோவாக்கி பார்க்கனும் என்று ஆசை இருந்தது அந்த ஆசை வனிதாவால் நிறைவேறியது.
அதனால் அவர் மீதான அன்பில் நான் அவர் பெயரை பச்சைக் குத்திக் கொண்டேன். பச்சை குத்திக்கொண்ட நாட்களிலிருந்தே அதிக சண்டை உருவானது.சண்டை காரணமாகவே நான் பச்சை குத்திக்கொண்ட புண்கள் ஆறாத நிலையில் சில நாட்களிலே நான் அழித்து விட்டேன். தற்போது இருவரும் இணைந்து தயாரித்து நான் நடித்த படத்தின் போது வனிதா என்னை கேட்காமலேயே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறினார். அப்போது ஏன் கூறினீர்கள் என்று கேட்டபோது அவர் எல்லாம் படத்துக்காக என்று சமாளித்தாராம்.