Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் திரையுலகினருக்கு ஒரே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியில் பதவி.!

தமிழ் திரையுலகினருக்கு ஒரே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியில் பதவி.!

தமிழ் திரையுலகினருக்கு ஒரே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியில் பதவி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 July 2020 10:13 AM GMT

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த திரையுலகினருக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து நேற்று பாரதிய ஜனதா கட்சியின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் கட்சியின் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் பெப்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டள்ளார்.

இயக்குனர் பேரரசு, இசை அமைப்பாளர் தீனா ஆகியோர் கலாச்சார பிரவு மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து நடிகர் ராதா ரவி, நடிகர் விஜய்குமார், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினராகி உள்ளனர்.

மேலும் ஒரே நேரத்தில் திரையுலகில் சினிமா பிரபலங்களுக்கு கட்சி பதவி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News