சீனா கொரானா வைரஸ் பரவலை மறைத்து, ஆதாரங்களை அழித்ததாக சீன மருத்துவர் குற்றச்சாட்டு.!
சீனா கொரானா வைரஸ் பரவலை மறைத்து, ஆதாரங்களை அழித்ததாக சீன மருத்துவர் குற்றச்சாட்டு.!

சீனா, வுஹானில் ஆரம்பித்த கொரானா வைரஸ் பரவலை மறைத்தது என உலக நாடுகள் அனைத்தும் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, சீனாவில் ஆரம்பக்காலத்தில் கொரானா வைரஸ் நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர், டிசம்பர் மாதம் வுஹானில் ஏற்பட்ட தீவிர நோய்ப் பரவலை உள்ளூர் அதிகாரிகள் மறைத்ததாக கடந்த திங்களன்று, ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வுஹானில் ஆய்வு நடத்திய நடத்திய பேராசிரியர் குவோக் யுங்க யூஎன், கொரானா வைரஸ் சான்றுகள் அழிக்கப்பட்டதாகவும் மேலும் இது புது வகை வைரஸ் என்ற கண்டுபிடிப்புக்கு, பதிலும் மெதுவாகவே இருந்தது என்று BBCயிடம் தெரிவித்துள்ளார்.
"வுஹான் சந்தையை நாங்கள் பார்வையிடச் சென்றபோது அங்கு ஏற்கனவே சுத்தப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது" என்று கூறினார். எனவே வைரஸ் பரவிய இடமே இவ்வாறு செய்யப்பட்டதால் அங்கு எங்களால் வைரஸ் பரவியதற்கான காரணத்தைக் கண்டறியமுடியவில்லை" என்றும் கூறியுள்ளார்.
"வுஹானின் உள்ளூர் அதிகாரிகள் எதனையோ மறைப்பதாக நான் சந்தேகிக்கின்றேன். மேலும் வைரஸ் குறித்த தகவல்களை உடனே வெளியிட என்னை அனுமதிக்கவில்லை", என்றும் BBCயிடம் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
சீனா ஆரம்ப காலகட்டத்தில் நோய் பரவலினை கண்டுகொள்ளவில்லை என்றும் மேலும் டிசம்பரில் மருத்துவர் ஒருவர் சக ஊழியர்களை எச்சரிக்க முயன்றபோது அவருக்கு அபராதம் விதித்ததாகவும் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த சீனா, தன் மீது வரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
source : https://swarajyamag.com/insta/chinese-doctor-who-diagnosed-early-covid-19-cases-says-evidence-was-destroyed-as-part-of-cover-up