Kathir News
Begin typing your search above and press return to search.

"வனிதாவிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?" போட்டியில் அப்படி என்ன தான் கேட்கப்பட்டது தெரியுமா?

"வனிதாவிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?" போட்டியில் அப்படி என்ன தான் கேட்கப்பட்டது தெரியுமா?

வனிதாவிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்? போட்டியில் அப்படி என்ன தான் கேட்கப்பட்டது தெரியுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 12:05 PM GMT

வனிதாவிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்க வேண்டுமானால் நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று ஒரு தலைப்பு சென்னை மீம்ஸ் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அப்படி என்ன தான் கேள்விகளை மக்கள் கேட்டனர் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகை வனிதா ஜூன் 27-ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் குறித்து பலரும் பல சர்ச்சையான கேள்விகளை கேட்டு வருகின்றனர். பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக இவரை திருமணம் செய்து கொண்டதால் ஹெலன் எலிசபெத் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து பல நடிகர் நடிகையர் இயக்குனர் சுரேந்திரன் யூடியூப் பிரபலம் சூர்யா தேவி, வனிதா குறித்து பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். சமூக வலைத்தளங்களில் வனிதாவை பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து வனிதாவிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடப்பட்டிருந்தது.

அதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் நான் 90-ஸ் கிட்ஸ் உங்க ஊரு தஞ்சாவூர் தானே எனக்கு அங்க பொண்ணு கிடைக்குமா என்று காமெடியாக பதிவிட்டிருக்கிறார்.

மேலும் சிலர் அவரைக் திட்டியும், சில வடிவேல் காமெடி களையும் போட்டு அவரை திட்டியுள்ளனர்.

மேலும் சிலர் நாட்டில் எவ்வளவு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது இவரது பிரச்சினை தேவையா? என்று கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர்.

மேலும் வனிதா பற்றி யூடியூப் சேனலில் அவதூறாக கருத்து பரப்பியது குறித்து சூரியா தேவி மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்து சூரியா தேவி நேற்று இரவு 1 மணிக்கு கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News