கொரோனா பரிசோதனை நடத்தபடுவதில் தமிழகம் முதலிடமா ..? நிதி ஆயோக் அளித்த புள்ளிவிபரத் தகவலில் அம்பலம்
கொரோனா பரிசோதனை நடத்தபடுவதில் தமிழகம் முதலிடமா ..? நிதி ஆயோக் அளித்த புள்ளிவிபரத் தகவலில் அம்பலம்

By : Kathir Webdesk
நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தனது டிவிட்டர் தகவலில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொரு நாளும் நடத்தும் கொரோனா பரிசோதனை விபரங்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதில் நாட்டிலேயே அதிக அளவாக டெல்லியில் 10 லட்சம் பேரில் 32,863 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் 10 லட்சம் பேருக்கு 18,597 பேருக்கு பரிசோதனை நடத்தபட்டு 2 வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு 16,663 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே பரிசோதனை நடைபெறுகிறது .
ஆனால் தமிழகம் இந்தியாவிலேயே பரிசோதனை நடத்துவதில் முதலிடத்தில் இருப்பதாக அமைச்சர்கள், அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் டிவிட்டர் தகவலில் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் தற்போது மேற்கொள்ளப்படும் உயர் பரிசோதனைகளை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
