சீனாவின் மின் உற்பத்திப் பொருட்கள் இனி இந்தியாவில் எட்டிப்பார்க்காது - மத்திய அரசு கொடுத்த ஷாக்கில், ஷேக்கான சீனா!
சீனாவின் மின் உற்பத்திப் பொருட்கள் இனி இந்தியாவில் எட்டிப்பார்க்காது - மத்திய அரசு கொடுத்த ஷாக்கில், ஷேக்கான சீனா!

சீனாவுடனான மோதல் போக்கை தொடர்ந்து பிரதமர் மோடி உள்நாட்டு உற்பத்தி என்ற கொள்கை முடிவை கையில் எடுத்தார். இந்திய மின்சார உபகரணங்கள் உற்பத்தி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் சீனாவுக்கு வழங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகின்றன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யலாம் என்று பார்த்தால், மின் சாதன உற்பத்திக்கு பயன்படும் காப்பர் தொழிற்சாலைகளை போராட்டம் செய்து மூடி விடுகின்றனர். இதனால் அந்நிய நாடுகளின் தயவை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டி உள்ளது.
மற்ற நாடுகளில் இருந்து மின் சாதன பொருட்களை வாங்குவதால் செலவு அதிகம் ஏற்படும் நிலை ஏற்பட்ட போதும், சீனத் தயாரிப்புகளை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய மின் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. சுக் தெரிவித்துள்ளார்.
இனி சீன தயாரிப்புகளுக்கு பதில், ஜப்பான், தைவான், கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து மின் உபகரணங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல மென்பொருட்களை ரஷ்யா, செக் குடியரசு அல்லது போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மின்சாதனங்களை பொறுத்தவரையில், ஜப்பான் பொருட்கள் தரமானதாக இருக்கும். நீர்மின் நிலையங்களில் 40-50வருடங்களாக. ஜப்பானின் மின் சாதனங்கள் நிற்க்காமல் இப்போதும் இயங்கிகொண்டே இருக்கிறது.