ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மேற்கு இந்தியா தீவு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஹோல்டர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மேற்கு இந்தியா தீவு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஹோல்டர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.!

தற்போது ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் மற்றும் ஆஸ்திரேலியாவின் மரன்ஸ் லபுஸ்சேன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது நடைபெற்ற மேற்கு இந்தியா தீவு - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்தியா தீவு அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 32 புள்ளிகள் அதிகரித்து ஒரு இடம் முன்னேறி 862 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் நீல் வாக்னர் 843 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும், ஜாசன் ஹோல்டரின் சிறப்பான தரவரிசை மட்டுமில்லாமல் கடந்த 20 ஆண்டுகளில் மேற்கு இந்தியா தீவு அணியின் ஒரு பவுலரின் அதிகபட்ச புள்ளி ஆகும்.