அல்லு அர்ஜுன் படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகினார்? - தமிழர் பிரச்சனையாக இருக்கக் கூடும் என தகவல்.!
அல்லு அர்ஜுன் படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகினார்? - தமிழர் பிரச்சனையாக இருக்கக் கூடும் என தகவல்.!

By : Kathir Webdesk
ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் ஒருசில நாட்கள் விஜய்சேதுபதி குறித்த காட்சிகளும் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அந்த படத்தில் விஜய்சேதுபதி திடீரென விலகி விட்டாராம். இதுகுறித்து பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கூறினார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக "புஷ்பா" படத்தில் இருந்து விலகியதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த படத்தில் ஆந்திராவில் தமிழர் செம்மரக்கடத்தல் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், இதனால் தான் விஜய்சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. சுகுமார் இயக்கும் இந்த படம் "புஷ்பா". அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார் மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு பதில் இந்த படத்தில் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
