Kathir News
Begin typing your search above and press return to search.

"பயம் என்கின்ற பலவீனமா?"- தி.மு.க டெல்லியில் மடிப்பிச்சை கேட்ட வரலாறு ஸ்டாலினுக்கு தெரியாதா? முரசொலி தலையங்கத்திற்கு முடிவுரை எழுதிய ஆசீர்வாதம் ஆச்சாரி!

"பயம் என்கின்ற பலவீனமா?"- தி.மு.க டெல்லியில் மடிப்பிச்சை கேட்ட வரலாறு ஸ்டாலினுக்கு தெரியாதா? முரசொலி தலையங்கத்திற்கு முடிவுரை எழுதிய ஆசீர்வாதம் ஆச்சாரி!

பயம் என்கின்ற பலவீனமா?- தி.மு.க டெல்லியில் மடிப்பிச்சை கேட்ட வரலாறு ஸ்டாலினுக்கு தெரியாதா? முரசொலி தலையங்கத்திற்கு முடிவுரை எழுதிய ஆசீர்வாதம் ஆச்சாரி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 1:08 PM GMT

இன்று (13.7.2020) வெளிவந்த 'முரசொலி' நாளிதழில் "தி.மு.க.வை வீழ்த்த உத்திகளை வகுக்கிறார்களாம்" என்கிற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,

"பயம் என்கின்ற பலவீனமா?" - முரசொலிக்கு எனது கேள்வி.

13.7.௨௦௨௦-ல் (இன்று) வெளிவந்த 'முரசொலி' நாளிதழில் "தி.மு.க.வை வீழ்த்த உத்திகளை வகுக்கிறார்களாம்" என்கிற தலைப்பில் எழுதப்பட்ட நீண்ட தலையங்கம் என்னை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. முரசொலி நாளிதழ் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் என்ற வகையில், இந்தத் தலையங்கம் தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்றபின்பு தான் பிரசுரிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.

வழக்கம்போல, முரசொலி பாணியில் "ஆச்சாரியர்கள்" என்றிருக்கிறார்கள். "நூலோர்கள்" என்றிருக்கிறார்கள். "டெல்லி எஜமானர்கள்" என்றும் வழக்கம்போலவே அழைத்திருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு எதிராக "லேகியம்" தயாரிப்பதாகவும், அதை வைத்து அ.இ.அ.தி.மு.க.வைப் பலப்படுத்த சிலர் நினைப்பதாகவும், தி.மு.க. ஒரு சுதேசி இயக்கம் என்றும் எரிச்சலை கொட்டியிருக்கிறார்கள். ஆம், ஆச்சாரியர்கள் என்றாலே தி.மு.க.வினருக்கு அச்சம் தான். எனது பேரை நேரடியாக குறிப்பிடக் கூட "பயம்" என்று பார்க்கையில், உங்களது இந்த "பயம்" எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது.

பெங்களூரு சிறையில் இருக்கும் ஒருவர் சட்டரீதியாகவே விடுதலை பெற்று வருவதையும், அதை பற்றி வலைத்தள பதிவுகளோ, ஊடக விவாதங்களோ வருவதையும் சிறிதும் விரும்பாத மனப் பதற்றத்தை தலையங்கத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

தி.மு.க.வை எதிர்ப்பதற்கு ஒரு 'நோஞ்சானை' பயில்வானாக்கவும் முயற்சி நடப்பதாகவும் உவமையோடு சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஏன் இந்தப் பதற்றம்? எதனால் இந்த அளவுக்குப் பிதற்றல்?

தேசியமும், தேசியக்கட்சிகளும் என்ன, தி.மு.க. தொட்டுக்கொள்ளும் ஊறுகாயா? "சுதேசி" இயக்கம் என்று சொல்லிக்கொள்ள தி.மு.க.வுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? தி.மு.க.வை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த ஆச்சாரியார் என்று தி.மு.க. ஏடுகளால் தூற்றப்பட்ட ராஜாஜியுடன் 1967 தேர்தலில் ஒன்றாக கூட்டணி வைத்துக் கொள்ளவில்லையா? அந்த ஆச்சாரியாரின் வியூகம்தான் முதன்முதலாக உங்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது என்பதை மறந்துவிட்டீர்களா?

நெருக்கடி நிலையை எதிர்த்து மிசா கைதியான வரலாற்றைச் சொல்லிக்கொண்டே, மதுரையில் இந்திரா காந்தியைக் கனத்த தடிகளால் தாக்கிய சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குள் அதே காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைக்கவில்லையா? ஜெயின் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க. மீண்டும் காங்கிரசுடன் கை கோர்க்கவில்லையா? தமிழ் ஈழம் என்கின்ற தமிழருக்கு சுதேசமான ஒரு நாடு அமைய இருந்த நிலையில், உண்ணா நோன்பு என்ற பித்தலாட்டம் நடத்தி, ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்ததை தமிழர்கள் மன்னிப்பார்களா? மத்திய அமைச்சரவையில் 'பொறுப்பான' பதவிகளைக் கேட்டு நச்சரித்துப் பெறவில்லையா? இதெல்லாம் 'சுதேசிய' அடையாளங்களா..... சொல்லுங்கள்?

திராவிட நாடு கொள்கையைத் தூக்கி வீசியதிலிருந்தே எத்தனை கொள்கைகளைக் 'கூட்டணி'க்காக வீசியிருக்கிறது? என்னென்ன வழக்குகளுக்காகப் பதுங்கி இருக்கிறது என்பதெல்லாம் தி.மு.க. உடன்பிறப்புகளுக்கே தெரியாத விஷயம் அல்ல. கொள்கை என்பது தினம்தோறும் மாற்றும் சட்டை என்பது தி.மு.க.வுக்கு பொருந்தும் சரியான உதாரணம்.

நாட்டையே உலுக்கிய வழக்கில் சிறைக்குப் போவதற்குமுன்பு, 2010ஆம் ஆண்டு, மே திங்கள் 5ஆம் நாள், டெல்லி வந்து, சோனியா காந்தியையும், மன்மோகன் சிங்கையும் சந்தித்து "மடிப்பிச்சை கேட்ட வரலாற்றை தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் தனது தந்தையிடம் கேட்டு அறிந்திருப்பார் என்று நம்புகின்றேன்.

சிறையில் இருந்து வெளிவருவது சட்டரீதியான ஒரு நிகழ்வு. தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்கள் திகார் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தபோதே, டெல்லியில் அதிரடியான வரவேற்பை நடத்திய இவர்கள், இன்னொருவர் சிறையிலிருந்து வருவதைப் பற்றி பேசுவதற்கு முன் தன்னைப் பற்றி யோசிக்கவேண்டும்.

மொத்தமாக பார்க்கையில், வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தோற்றுவிடுமோ என்ற "பயத்தின்" வெளிப்பாடே இன்றைய முரசொலி தலையங்க பிதற்றல். "தனது எதிரிக்கு தனது பலவீனத்தை காட்டக்கூடாது" என்பது போர்முறையின் முக்கிய யுக்தி. ஆனால், முரசொலியின் இந்தத் தலையங்கம் மூலமாக, திரு. ஸ்டாலின் அவர்கள், தனது "பயம்" என்ற பலவீனத்தை" பொதுவெளியில் காட்டியிருப்பது, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தங்களது கட்சியினர் மட்டுமல்லாது, தங்களது கூட்டணி கட்சியினரின் மன பலத்தையும் பாதிக்கும் என்பது கூட தெரியாத, போர்முனையை விடுத்து கொல்லைப்புறத்தில் போர் புரியும் ஒரு "வெற்றுத் தளபதி" என்பதை நிரூபித்துள்ளார்.

தி.மு.க.வின் இந்த "பயம்" தான், எங்களது "வெற்றியின் முதல்படி" என்பதில் எனக்கு மகிழ்ச்சியே" என்று முனைவர் ஆசீர்வாதம் ஆச்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News